Published:Updated:

ஊராட்சித் தேர்தல் `பஞ்சாயத்துகள்' - களத்தில் கழகங்கள் அரங்கேற்றும் `கூத்து'கள்!

ஊராட்சித் தேர்தல்
ஊராட்சித் தேர்தல்

பல ஊராட்சிகளில் பகிரங்கமாகவே 'தலைவர் பதவி ஐம்பது லட்சம் ரூபாய்... ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்' என்று கூவிக் கூவி ஏலம்விட்டிருக் கிறார்களாம்

"உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்துவிட்டதே!"

"அது முடிந்துவிட்டது. ஆனால், அதற்கு முன்பே பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ஏலங்களும் முடிந்துவிட்டன. விருதுநகர் மாவட்டத்தில் இதை தட்டிக்கேட்ட இளைஞர் ஒருவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். இதுதொடர்பான உமது நிருபரின் தனிக்கட்டுரையையும் https://www.vikatan.com/news/crime/virudhunagar-youth-murdered-for-panjayat-election-issue படித்தேன். தமிழக வரலாற்றிலேயே இதுபோன்று அதிக எண்ணிக்கையிலான பதவிகள் ஏலம் மூலம் முடிவுக்கு வந்ததில்லை என்கிறார்கள்.

இந்த நான்கு ஆண்டுகளில் அ.தி.மு.க-வில் பணத்தை வைத்து நடந்த ஆட்டங்களே அதிகம். அதே கூத்துதான் இப்போது ஊராட்சித் தேர்தலிலும் நடந்துள்ளது. பல ஊராட்சிகளில் பகிரங்கமாகவே 'தலைவர் பதவி ஐம்பது லட்சம் ரூபாய்... ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்' என்று கூவிக் கூவி ஏலம்விட்டிருக் கிறார்களாம். இதை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் சிலர், 'உங்கள் கட்சித் தலைமையே கூவத்தூர் ஏலத்தில்தானே பதவியைக் கைப்பற்றியது' என்று நக்கலடிக்கிறார்கள்."

"ஊராட்சிகளில் ஏலத்தொகை எவ்வளவு வரை போகிறதாம்?"

"ஆ.ராசாவின் சொந்த ஊரான சத்திரமனை வேலூர் உள்ளிட்ட கிராமங்களிலும் கடைசி நாள் வரை, ஊராட்சி மன்றத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. அங்கும் ஏலம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் எம்.எல்.ஏ-வான பரமேஸ்வரியின் கணவர் முருகனை ஒன்றியத் தலைவர் ஆக்க பல லட்சங்கள் வாரி இறைக்கப்பட்டுவருகிறது. தொட்டியம் அடுத்த அரசலூர் கிராமத்தில் நான்காவது வார்டு உறுப்பினர் பதவியும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டுள்ளது.''

நடக்கவிருக்கும் உள்ளாட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சில் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் அந்தச் சமூகத்தினருக்குச் சரியான பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்பதே அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம்

"ஆனால், அ.தி.மு.க தரப்பில் வேட்பாளர்கள் பட்டியலெல்லாம் வெளியானதே?"

"வெளியானதுதான். அதில் இருக்கும் பெயர்களெல்லாம் அமைச்சர்களின் பினாமிகள் என்கிறார்கள். 'சீட் தருகிறோம்... நீ செலவு செய்ய முடிந்தால் செய்துகொள்' என்று கொக்கி போட்டதும், கட்சிக்காரர்கள் பலரும் ஒதுங்கிவிட்டார்களாம். ஆனால், அமைச்சர்களுக்கு வேண்டிய ஆட்கள் என்றால் மட்டும் அமைச்சர் தரப்பே செலவை பார்த்துக்கொள்வதாக ஒப்புதல் கொடுக்கப்பட்டதாம். இதற்கிடையே அ.தி.மு.க கூட்டணிக்குள் இருந்த பா.ஜ.க-வும் பல மாவட்டங்களில் தனித்து களம் இறங்கியிருக்கிறது."

"பா.ஜ.க-வின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ், 'அ.தி.மு.க-வுடனான உறவு கணவனும் மனைவியும் போன்றது' என்றெல்லாம் சொல்லிவந்தார். அப்படி இருக்கும்போது ஏன் இந்தத் தனிக்குடித்தனம்?"

"அ.தி.மு.க கூட்டணியில், கூட்டணிக் கட்சிகள் தரப்பில் 40 சதவிகித இடங்களை எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால், 'மாவட்டவாரியாக முடிவு' என்று அ.தி.மு.க தலைமை அறிவித்ததும், பா.ஜ.க தரப்பை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்.

இல.கணேசன் அ.தி.மு.க தரப்பைச் சந்தித்து பேசியபோதும் சரியான ஒத்துழைப்பில்லை. இதனால், தனித்தே களத்தில் நிற்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் பா.ஜ.க பங்காளிகள். வட மாவட்டங்களில் மட்டும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 35 சதவிகிதம் வரை ஒதுக்கீடு நடந்துள்ளது. தென் மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும்படி யாருக்கும் சீட் ஒதுக்கவில்லை என்கிறார்கள்."

"ம்"

"இதனால், தென் மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினரே ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை களத்தில் இறக்க முடிவுசெய்துள்ளார்கள். அதைத் தடுக்க ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து பணபேரமும் நடந்துவருகிறது. தி.மு.க-விலும் இந்தப் பஞ்சாயத்துகள் உள்ளன. மாவட்டவாரியாக அந்தக் கட்சியின் கூட்டணிக்குள்ளும் சத்தமில்லாமல் பங்கீடு முடிந்துவிட்டது. ஆனால், தி.மு.க-விலேயே சில அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பாளர்களை களத்துக்குக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், உள்ளாட்சித் தேர்தலில் சாதிரீதியான பிரிவினைகளும் எதிரொலிக்கின்றன."

"என்னவாம்?"

"தென் மாவட்டங்களில் அகமுடையார் சமூகத்தினர் அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரு கட்சிகளுக்கும் எதிராகக் கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர். நடக்கவிருக்கும் உள்ளாட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சில் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் அந்தச் சமூகத்தினருக்குச் சரியான பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்பதே அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம். முக்குலத்தோரில் அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மறவர் சமூகத்தினருக்கே அதிக வாய்ப்புகளைக் கொடுக்கிறார்கள் என்பது அவர்கள் வைக்கும் விமர்சனம்."

ஊராட்சித் தேர்தல் `பஞ்சாயத்துகள்' - களத்தில் கழகங்கள் அரங்கேற்றும் `கூத்து'கள்!

- "லாட்டரி விவகாரம் அரசுக்கு பெரும்தலைவலியாகிவிட்டதே?" | "தி.மு.க-வில் கிஷோரின் செயல்பாடுகள் வேகம் எடுத்துவிட்டனவா?" | "எதிரும் புதிருமாக இருப்பதாகக் கருதப்பட்ட ஸ்டாலின் - கனிமொழி இருவரும் இணைந்தே கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றிருக்கிறார்களே!" | "சி.வி.சண்முகத்துக்கு எதிராக பொன்முடி பொங்கியிருக்கிறாரே? | "ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் டிரெய்லர் சொல்லும் சேதி? > கழுகார் தந்த தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: ஒரிஜினலாவே நான் வில்லன்மா? - ரஜினியின் பன்ச் யாருக்கு? https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-dec-22

நெஞ்சைப் பதறவைக்கும் படுகொலை!

ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலத்தில் எடுக்கும் சம்பவங்கள், தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. சில ஊர்களில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மாதிரி வாக்கெடுப்புகூட நடத்தப்படுகிறது. ஜனநாயகத்தைப் படுகொலைசெய்து சட்டவிரோதமாக நடக்கும் இப்படியான ஏல விவகாரத்தில், இப்போது ஓர் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி ஊராட்சி. இதற்கான தலைவர் பதவியைக் குறிவைத்திருக்கும் அ.தி.மு.க கிளைச் செயலாளர் ராமசுப்பு, 'போட்டியின்றி தன்னைத் தேர்வுசெய்ய வேண்டும். யாரும் எதிர்த்துப் போட்டியிடக் கூடாது' என்று ஊர்க்கூட்டத்தில் வற்புறுத்தியிருக்கிறார். அப்போது, 'அதெல்லாம் முடியாது. தேர்தல் நடத்தியாக வேண்டும்' என்று ஏல முறைக்கு எதிராகப் பேசியிருக்கிறார் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார். அதைத் தொடர்ந்து நடந்த அடிதடியில் சதீஷ்குமார் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. > இது தொடர்பான விரிவான செய்திக் கட்டுரைக்கு > ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்... தட்டிக்கேட்ட இளைஞர் கொலை! https://www.vikatan.com/news/crime/virudhunagar-youth-murdered-for-panjayat-election-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு