Election bannerElection banner
Published:Updated:

ஒன்றியச் சேர்மன் பதவி யாருக்கு? - முற்றுகையிடப்பட்ட திருவெண்காடு துர்கா ஸ்டாலின் வீடு

தேர்தல்
தேர்தல்

சீர்காழி ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிக்க தி.மு.க-வில் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஒன்றிய சேர்மன் பதவிக்கு தி.மு.க தலைவரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போட்டியாளரான இன்னொருவரின் கிராம மக்கள், திருவெண்காட்டில் உள்ள துர்கா ஸ்டாலின் வீட்டுக்கு முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க. வினர்.
தி.மு.க. வினர்.

சீர்காழி ஒன்றியத்தில், 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 9 பேர் தி.மு.க சார்பிலும், 7 பேர் அ.தி.மு.க சார்பிலும், சுயேச்சைகள் 5 பேரும் வெற்றிபெற்றுள்ளனர். இதில், அதிக இடங்களில் வென்றுள்ள தி.மு.க-தான் ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிக்கும். ஆனால், இந்த சேர்மன் பதவியைப் பிடிக்க தி.மு.க-வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பூம்புகார் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் ரவியின் மனைவி மதுமிதா, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் மனைவி கமலஜோதி, சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பிரபாகரன் மனைவி உஷாநந்தினி ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

இதில், தேவேந்திரன், துர்கா ஸ்டாலினின் சொந்த ஊரான திருவெண்காட்டுக்கு அருகிலுள்ள மேலையூரைச் சேர்ந்தவர். துர்கா குடும்பத்தோடு மிகவும் நெருக்கமானவர். அந்த அறிமுகத்தில், தேவேந்திரன் சென்னைக்குச் சென்று துர்கா ஸ்டாலினைச் சந்தித்து, தனக்கு சேர்மன் பதவியை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள, அவரும் தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான நிவேதா முருகனிடம் தேவேந்திரனை ஒன்றிய சேர்மன் ஆக்கும்படி கேட்டுக்கொண்டதாகச் செய்தி பரவியிருக்கிறது.

 தேர்தல் தி.மு.க. வினர்.
தேர்தல் தி.மு.க. வினர்.

இதை அறிந்த பூம்புகாரைச் சேர்ந்த ரவியின் ஆதரவாளர்களும், அந்தக் கிராம மக்களும், சுமார் 300 -க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை திரண்டு, திருவெண்காட்டில் உள்ள துர்கா ஸ்டாலின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். ஆனால், கோயில் அருகே அவர்கள் திரண்டு வந்தபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதற்குள், தி.மு.க-வின் முக்கியப் பொறுப்பாளர்கள் நேரில் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி `உட்கட்சி பிரச்னையை நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம்' என்று பேசி முடித்து, அவர்களை அழைத்துச் சென்று விட்டனர். இதனால் திருவெண்காட்டில் பரபரப்பு ஏற்பட்டு முடிந்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு