Published:Updated:

வைட்டமின் 'ப' வியூகம்... எடப்பாடி 'மூவ்'... ஸ்டாலின் கொந்தளிப்பு!

அ.தி.மு.க மக்கள் பிரதிநிதிகள் அதிகமாக இருந்தால், சட்டமன்றத் தேர்தலில் ஜெயிப்பதும் தி.மு.க-வுக்குச் சிக்கலாகிவிடும். அதனால்தான் எப்படியாவது தேர்தலைத் தடுக்க நினைக்கிறது தி.மு.க தரப்பு."

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

'உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் எல்லாமே ஆளுங்கட்சிக்குச் சாதகமான விஷயங்களாகவே இருப்பதுதான் தி.மு.க தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகுதான் உச்ச நீதிமன்றத்தில் முட்டி மோதத் தொடங்கினார்கள். வார்டு மறுவரையை தி.மு.க தரப்பு காரணம்காட்டினாலும், உண்மையான காரணம் அதுவல்ல என்கிறார்கள்.'' விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/38wLfxl

''வேறு என்ன காரணமாம்?''

''அ.தி.மு.க திட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். தேர்தலைப் பிரித்துப் பிரித்து நடத்துவதால், வைட்டமின் 'ப'வைக் களமிறக்குவது அ.தி.மு.க-வுக்கு எளிது. கிட்டத்தட்ட இடைத்தேர்தல் பாணிதான் இது. இதனால், ஆளுங்கட்சியே பெரும்பான்மையான உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றிவிடும். அ.தி.மு.க மக்கள் பிரதிநிதிகள் அதிகமாக இருந்தால், சட்டமன்றத் தேர்தலில் ஜெயிப்பதும் தி.மு.க-வுக்குச் சிக்கலாகிவிடும். அதனால்தான் எப்படியாவது தேர்தலைத் தடுக்க நினைக்கிறது தி.மு.க தரப்பு."

வைட்டமின் 'ப' வியூகம்... எடப்பாடி 'மூவ்'... ஸ்டாலின் கொந்தளிப்பு!

''அதுசரி... உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் வியூகம் எப்படியிருக்கிறது?''

''வைட்டமின் 'ப' இருக்க கவலை எதற்கு என்றிருக்கிறார்கள். அதையும்விட முதல்வர் பழனிசாமி, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆகிய 'சாமி ஸ்கொயர்'களின் வியூகத்தில் ஈஸியாக ஜெயித்துவிடலாம் என நினைக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இந்தத் தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள அச்சப்படுவதும் இதனால்தான்.'

வைட்டமின் 'ப' தான் துருப்புச்சீட்டு. பொங்கல் பரிசு 1,000 ரூபாய் தருவதற்குத் தடையில்லை என்று சொல்லிவிட்டார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி. அடுத்ததாக, 'ஓட்டுக்கு பிங்க் கலர் பெரிய நோட்டை இறக்கத் தயாராகிவிட்டது ஆளுங்கட்சி!' என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சுகள் பரபரப்பாகச் சுழல்கின்றன.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

மாவட்டங்களில் நடக்கும் வேலைகளுக்கான டெண்டர்கள்மூலம் கிடைக்கும் 'கமிஷனை' வைத்துதான் கட்சிக்கு நிதி கிடைக்கும். மேலிடத் திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்போது தேர்தல் முடியும் வரை மாவட்டங் களுக்கு நேரடியாகவே சென்று சேரும்படி ஏற்பாடு செய்துள்ளார்களாம். அதனால், இந்தத் தேர்தலில் வைட்டமின் 'ப' தாராளமாகப் புழங்கும் என்கிறார்கள். பொங்கல் பரிசு 1,000 ரூபாய் மற்றும் பிங்க் கலர் பெரிய நோட்டு இரண்டையும் வைத்து ஜெயிக்கலாம் என நம்புகிறார்கள்.''

''தி.மு.க ரியாக்‌ஷன் என்னவோ?''

''ஸ்டாலின் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசாரமான விவாதமே நடந்திருக்கிறது. சில மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் சிலரும் பேசியிருக்கிறார்கள். கே.என்.நேரு பேசும்போது, 'கட்சிக்காரன் பணத்தைச் செலவு செய்யத் தயாரா இருக்கான். ஆனா, தேர்தல் நேர்மையா நடக்காமப்போனா இருக்கிற காசையும் இழந்துட்டுப் போக முடியுமா?' என்று ஆரம்பித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தின் ஹைலைட்டே சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனின் பேச்சுதானாம்.

வைட்டமின் 'ப' வியூகம்... எடப்பாடி 'மூவ்'... ஸ்டாலின் கொந்தளிப்பு!

'நம்மகூட கூட்டணியில இருந்துட்டே ஆளுங்கட்சியோடு தொடர்புல இருக்காங்க' என்று திருமாவளவன் - எடப்பாடி சந்திப்பை மனதில்வைத்து அன்பழகன் பேச... ஸ்டாலின் குறுக்கிட்டு, 'கூட்டணிக் கட்சியை ஏன் சொல்றீங்க? நம்ம கட்சியினரே தொடர்புல இருக்காங்க' என்று கோபப்பட்டாரம். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 'யார் யாரெல்லாம், யார் யாரோடு தொடர்புல இருக்கீங்கன்னு தெரியும். இதுவரைக்கும் எப்படியோ, இனிமே மாறிக்கோங்க' என்று எச்சரிக்கவும் செய்தாராம்.''

- அ.தி.மு.க வியூகத்தின் பின்னால் இயங்குவது யார்? தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெ.அன்பழகன் பேசியது என்ன? ப.சிதம்பரம் சீற்றத்தின் பின்னணி என்ன? ரஜினி, கமல் இருவருமே உள்ளாட்சித் தேர்தலை உதறிவிட்டது ஏன்? - இந்தக் கேள்விகளுக்கான விடைகள் சொல்லும் கழுகார் தகவல்களை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: உள்ளாட்சி ரேஸ் - சாமி ² வியூகம்! - எடப்பாடி ரெடி... எதிர்க்கட்சிகளுக்கு வெடி! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-dec-15

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |