Published:Updated:

`சுதந்திரத்துக்கு அப்புறம் இப்போதான் ஃபர்ஸ்ட் பஸ்ஸே வருது!' திருச்சுழி அருகில் இப்படியும் ஒருகிராமம்

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

கிராம மக்களின் பல்லாண்டு காலப் போராட்டத்திற்கு இன்று பலன் கிடைத்தது. முதன்முறையாக எம்.மீனாட்சிபுரத்துக்கு இன்று அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

government bus service
government bus service

முதன் முறையாக தங்கள் ஊருக்கு பேருந்து வருவதை கண்ட கிராம பொதுமக்கள் பேருந்தை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

government bus service
government bus service

உலகம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் பேருந்துகளையே பார்க்காத கிராமங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை பேருந்து இயக்கப்படவே இல்லை. இதனால் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள எம்.ரெட்டியபட்டி கிராமத்துக்கு நடந்து சென்று தான் பேருந்து ஏற வேண்டும்.

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர். வெளியூர்களிலிருந்து வரும் உறவினர்களும் கூட பேருந்து இல்லாத காரணத்தால் ஊருக்கு வருவதற்கு கூட யோசிக்கும் நிலை இருந்தது. எனவே, தங்கள் ஊருக்கும் பேருந்து இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பலமுறை மனு அளித்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

government bus service
government bus service

இந்நிலையில் கிராம மக்களின் பல்லாண்டு காலப் போராட்டத்திற்கு இன்று பலன் கிடைத்தது. முதன்முறையாக எம்.மீனாட்சிபுரத்துக்கு இன்று அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. தங்கள் ஊருக்குள் பேருந்து வருவதை அறிந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஊர் எல்லையில் கூடி பேருந்தை வரவேற்றனர்.

பேருந்தை வரவேற்க முன்கூட்டியே தயாராக இருந்த அவர்கள் பேருந்துக்கு முன் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குப் பொன்னாடை போர்த்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

government bus service
government bus service

பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஏற்ப அருப்புக்கோட்டையிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் இந்தப் பேருந்து கல்லூரணி, எம். ரெட்டியபட்டி வழியாக 7 மணிக்கு மீனாட்சிபுரத்துக்கு வரும். மாலை பள்ளி முடியும் நேரம் அளவில் மாலை 4.30 மணிக்கு பேருந்து கிராமத்திற்கு உள்ளே சென்று வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் கிராமத்துக்குள் பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.