Published:Updated:

கவுன்சிலராகப் பதவியேற்றதும் சுவர் ஏறிக் குதித்து தப்பிய சுயேச்சை?! - உசிலம்பட்டியில் பரபரப்பு

கவுன்சிலர் ஓட்டம்
கவுன்சிலர் ஓட்டம்

பதவி ஏற்ற உடன் கவுன்சிலர் சுவர் ஏறிக் குதித்து ஓடிய சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 76.19 சதவிகிதம் வாக்குகளும் இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் 77.73 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகின.

கவுன்சிலர்
கவுன்சிலர்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில், வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் வெற்றிபெற, எதிரணியில் உள்ள ஒன்றிய கவுன்சிலர்களை அரசியல் கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளன.

கவுன்சிலர் ஓட்டம்
கவுன்சிலர் ஓட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில் 8 -வது வார்டு கவுன்சிலருக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் அரவிந்தும் பதவி ஏற்றுக்கொண்டார்.

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க., 9 இடங்களையும், தி.மு.க., 6 இடங்களையும் பிடித்த நிலையில் அரவிந்த் சுயேச்சையாகப் போட்டியிட்டு 900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கவுன்சிலர் பதவியேற்று முடிந்த உடன் பதற்றத்துடன் காணப்பட்ட அரவிந்த் ஊராட்சி மன்றச் சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து ஓடிச் சென்று காரில் ஏறிச் சென்றார்.

அரவிந்த்
அரவிந்த்

சுயேச்சையாக வெற்றி பெற்ற அரவிந்த் சுவர் ஏறித் தப்பி ஓடியதால் அவர் கடத்தப்பட்டாரா.. அல்லது தன்னிச்சையாகத் தப்பி ஓடினாரா.. என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு