Published:Updated:

`வேட்புமனுவில் கையெழுத்து போடல!'-ஆளுங்கட்சிக்குள்ளேயே அடிதடியில் முடிந்த கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்

கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்
கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்

நீலகிரி அ.தி.மு.க-வில் வலுக்கும் கோஷ்டி பூசல் காரணமாக, எம்.எல்.ஏ சாந்தி ராமு மற்றும் மாவட்டச் செயலாளர் புத்திசந்திரன் ஆதரவாளர்கள் இடையே கோத்தகிரி கூட்டுறவுத் தலைவர் தேர்தலில் அடிதடி ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கூட்டுறவு பண்டகசாலை சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 6-ம் தேதி, இதற்கான தேர்தல் தேதி இறுதிசெய்யப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்
கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்

மொத்தம் 531 ஓட்டுகளில் 133 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன. செல்லுபடியான 398 ஓட்டுகளில், 11 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த இரண்டு பதிவிகளுக்கும் அ.தி.மு.க-வினரே இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றனர். குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமுவின் ஆதரவாளர் வடிவேல் தலைவர் பதவிக்கும், மாதன் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டனர்.

கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்
கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்

மாவட்டச் செயலாளர் புத்திசந்திரன் ஆதரவாளர் ரங்கசாமி தலைவர் பதவிக்கும், பார்த்திபன் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டனர். தனது வேட்புமனுவில் கையெழுத்துப் போடவில்லை என பார்த்திபனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மாதன் போட்டியின்றி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவருக்கான தேர்தலில், மொத்தம் 11 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இருந்த நிலையில், இதில் ஒன்பது பேர் மட்டுமே வாக்களித்தனர். மாவட்டச் செயலாளர் ஆதரவாளர்கள் ரங்கசாமி மற்றும் பார்த்திபன் ஆகியோர் வாக்களிக்கவில்லை.

கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்
கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்

தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனக் கூறி, வேட்புமனுவை பார்த்திபன் கிழித்து எறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ சாந்திராமு ஆதரவாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து பார்த்திபனைத் தாக்கினர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது.

நடைபெற்ற தேர்தலில் 7 வாக்குகள் பெற்று வடிவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்
கோத்தகிரி கூட்டுறவு தேர்தல்

ஒரே கட்சியைச் சேர்ந்த இருதரப்பு ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் ஆளுங்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருடன் இரு தரப்பினருமே புகார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு