Published:Updated:

பரிதவிக்கும் கோட்டூர்புரம் மக்கள்...! குடிசை மாற்று வாரியத்தின் திட்டம் என்ன?

Kotturpuram Housing Board
News
Kotturpuram Housing Board

`சென்னை, கோட்டூர்புர குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் மாற்று இடங்களுக்குக் குடிபெயர வேண்டும்’ என ஒட்டப்பட்ட சுற்றறிக்கையால், அப்பகுதிமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

குடிசை மாற்று வாரியத்தால் ஒட்டப்பட்ட சுற்றறிக்கையில், `கட்டடங்களின் நிலை பழுதடைந்து இருப்பதால் 74 ப்ளாக்குகளில் உள்ள 1,476 குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டப்படவுள்ளது. அதற்கு ஏதுவாக அனைவரும் வீடுகளையும் காலி செய்ய வேண்டும். உறுதித்தன்மையற்ற கட்டடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு வாரியம் பொறுப்பேற்காது’ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

Slum Clearance board Intimation
Slum Clearance board Intimation

கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி திருநாவுக்கரசர் பேசுகையில், ``மக்களுடன் கலந்தாலோசிக்காமல், அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர். ஒரே சமயத்தில் அனைத்து வீடுகளையும் காலி செய்ய வேண்டும் எனத் தெளிவற்ற சுற்றறிக்கையை ஒட்டிவிட்டுச் சென்றது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஏற்கெனவே இந்தப் பகுதியில் இருந்த சில குடியிருப்புகளையும் கடைகளையும் இடித்துவிட்டு திரும்பவும் கட்டித்தருவதாகக்கூறி அங்குள்ள குடும்பத்தினரைப் பெரும்பாக்கத்திற்கு அனுப்பினர். அந்த இடத்தில் தற்போது நடைபெற்று வருகிற கட்டுமானம் எதற்காக என யாருக்கும் தெரியவில்லை. இடம்பெயர்ந்து சென்றவர்களுக்கு மீண்டும் இதே பகுதியில் குடியிருப்புகள் வழங்கப்படும் என எந்த விதமான உத்திரவாதமும் வழங்கப்படவில்லை” என்றார்.

Thirunavukkarasu
Thirunavukkarasu

குடிசை மாற்று வாரியத்தின் அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, அது தொடர்பாக முறையான விளக்கத்தைக் கேட்க, கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த மக்கள், `கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நலவாழ்வுச் சங்கம்’ என்கிற பெயரில் சங்கம் ஒன்றை உருவாக்கி குடிசை மாற்று வாரிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக வங்கி நிதி ஆதாரத்துடன், இந்தக் கட்டடங்களைக் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்துள்ளது என்றும் ,இதே பகுதியில் மறுகட்டுமானம் செய்துதர முடிவெடுத்திருப்பதாகவும் இப்பகுதி மக்களிடம், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோட்டூர்புரம் பகுதி மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது குடிசை மாற்று வாரியம்.

Engineer Sundara Moorthy
Engineer Sundara Moorthy

கூட்டத்தில் பேசிய குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் சுந்தரமூர்த்தி, ``வாரியம் நீண்ட காலம் ஆன குடியிருப்புகளின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப மறுகட்டுமானம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் மண் பரிசோதனை செய்தோம்.

அதில் அனைத்துக் குடியிருப்புகளும் உறுதியற்ற தன்மையுடன் இருப்பதால் மறுகட்டுமானம் செய்ய வாரியம் முடிவெடுத்துள்ளது. இது முதல்முறையாக உலக வங்கியின் நிதி ஆதாரத்துடன் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசு, உலக வங்கி இணைந்து இந்த மறுகட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறது. புதிய கட்டடங்களை 13 மாடிக் குடியிருப்புகளாக கட்டவிருக்கிறோம். தற்போது உள்ள 1476 குடியிருப்புகளுக்குப் பதிலாக 2925 (உத்தேசக் கணிப்பு) குடியிருப்புகள் கட்டவிருக்கிறோம்.

Kotturpuram People
Kotturpuram People

இதற்கான செயல்திட்டம், வரைபடம் உருவாக்க வல்லுநர் குழு அமைத்துள்ளோம். போக்குவரத்து காவல் துறை, விமானப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிடம் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி, தடையில்லாச் சான்று ஆகியவற்றைப் பெற வேண்டியிருக்கிறது. அனைத்துத் தரப்பையும் கலந்தாலோசித்து, அனைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.

``ஏற்கெனவே 180 சதுரஅடி பரப்பில் உள்ள வீடுகளைக் குறைந்தது 400 சதுரஅடி உள்ள வீடுகளாகக் கட்டித்தர வேண்டும். மேலும் கூடுதலாக கட்டப்படுகிற 1400 வீடுகள் யாருக்காக என்பது தெரியப்படுத்த வேண்டும். இங்கு இடிக்கப்படுபவர்களுக்கு மீண்டும் இங்கே வீடு கட்டித்தரப்படும் என்கிற எழுத்துபூர்வமான உத்திரவாதம் வேண்டும். செயல்திட்டத்தை உருவாக்குகிற வல்லுநர் குழுவில் மக்களின் பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும்.

Meeting
Meeting

மேலும், ஒரே நேரத்தில் அல்லாமல் பகுதி பகுதியாக மறுகட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவையெல்லாம் எத்தனை காலத்திற்குள் முடிக்கப்படும் என்ற திட்டம் வரையறுக்கப்படவேண்டும். இடிக்கப்படுகிற வீடுகளுக்கான இடைக்கால மாற்றுக் குடியிருப்புகள் அருகில் ஏற்படுத்தித்தர வேண்டும்” என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மக்கள் நலவாழ்வுச் சங்கத்தினர் மேலும் கூறுகையில், ``பெரும்பாக்கத்திற்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் இன்றுவரையிலும் வேலைக்காகவும், மாணவர்கள் பள்ளிகளுக்காகவும் இங்குதான் வந்து செல்கின்றனர். 1500 குடும்பங்களை ஒரே நேரத்தில் இடம்பெயரச் சொன்னால் அவர்களின் வாழ்வாதாரம் பற்றிய சிக்கல்களுக்கு என்ன தீர்வு? மறுகட்டுமானம் அவசியம் செய்தாக வேண்டும். ஆனால், மக்களின் வாழ்வாதாரச் சிக்கலுக்கும் தீர்வு வேண்டும். பெரும்பாக்கம் சென்றவர்களைப் போல எங்களுக்கும் எந்தவிதமான உத்திரவாதம் கிடைக்காமல் போய்விடுமோ என அச்சமாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

Kotturpuram people
Kotturpuram people

கோட்டூர்புரம் பகுதி மறுகட்டுமானம் குறித்து குடிசை மாற்று வாரிய முதன்மைப் பொறியாளர் ராஜசேகரன் கூறுகையில், “புதிய திட்டத்திற்கான வடிவமைப்பு ஐஐடி பேராசிரியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் எந்தக் கோரிக்கையும் புறக்கணிக்கப்பட மாட்டாது. ஆனால் கோட்டூர்புரம் பகுதி அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதி என்பதால்தான் உயர்மட்ட கட்டடங்களைக் கட்ட வேண்டிய தேவையுள்ளது. மூன்று மாதம் முறையான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் மக்கள் வெளியேற வேண்டிய தேவை வரும். மறுஒதுக்கீடு சான்று கொடுத்துத்தான் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இடைக்கால நிதியுதவியாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8000 வழங்கப்படும். திட்டத்தை ஒரு வருடத்திற்குள் செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

சந்தேகங்களைக் களைந்து மக்களுக்குத் தெளிவுதர அரசும், குடிசை மாற்று வாரியமும் முன்வர வேண்டும்.