Published:Updated:

மாவட்ட கவுன்சிலருக்கு ரூ.1 கோடி வரை... உள்ளாட்சி பேரம் பின்னணி!

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்! உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்ததால்தான், 3,558 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி முடக்கிவைக்கப்பட்டிருந்தது

உள்ளாட்சி
உள்ளாட்சி

''உள்ளாட்சிப் பதவிகளைப் பிடிப்பதற்கு மாநிலம் முழுக்க வியாபாரம் கனஜோராக நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2-ம் தேதி வெளியானவுடனே தலைவர், துணைத் தலைவர் பதவிகளைக் குறிவைத்து காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. ஜனவரி 11-ம் தேதி இந்தப் பதவிகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது.

கவுன்சிலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அரியலூர், தூத்துக்குடி, தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள் அ.தி.மு.க-வுக்கு உறுதியாகக் கிடைக்கும். அதேபோல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தி.மு.க-வுக்குக் கிடைக்கும்.

இழுபறியாக உள்ள கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் தலைவர் பொறுப்புக்கு குதிரைபேரம் கொடிகட்டிப் பறக்கிறது. வெற்றி உறுதி எனத் தெரிந்த மாவட்டத் தலைவர் பதவிகளைத் தட்டிப்பறிக்கவும் முயற்சி நடக்கிறது. அணி மாறி வாக்களிக்கும் ஒரு மாவட்ட கவுன்சிலருக்கு 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது.

ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளைப் பிடிக்க, ஓர் ஒன்றிய கவுன்சிலருக்கு 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது."

மாவட்ட கவுன்சிலருக்கு ரூ.1 கோடி வரை... உள்ளாட்சி பேரம் பின்னணி!

''இவ்வளவு பணம் கொடுத்து அந்தப் பதவிகளை வாங்கி இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?''

''என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்! உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்ததால்தான், 3,558 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி முடக்கிவைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த நிதி வெளிவரும். ஊராட்சி ஒன்றியத் தலைவர் களாக இருக்கப்போகிறவர்கள்தான் அந்த நிதியை பெருமளவு கையாள்வார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர், மாவட்ட ஆட்சித் தலைவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு குட்டி அமைச்சர்களாக வலம் வரலாம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் உத்திதான் இது.'' விரிவாக படிக்க க்ளிக் செய்க.... http://bit.ly/2FthCzk

"...'கவுன்சிலர்கள் பதவியேற்கத் தடைவிதிக்க வேண்டும்' என்று தி.மு.க நீதிமன்றம் சென்றதோ?"

"ஆமாம். தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவதால், ரகசிய வாக்கெடுப்பில் யார் யாருக்கு வாக்களித்தனர் என்பது தெரியப்போவதில்லை. கட்சி மாறி வாக்களிக்கும் நபர்கள்மீது கட்சித்தாவல் தடைச் சட்டமெல்லாம் பாயாது. இதனால், உள்ளாட்சித் தலைவர் பதவிகளைப் பிடிப்பதற்கு ஆளுங்கட்சியினர் 'மெகா கூவத்தூர்' காட்சிகளை தமிழகம் முழுவதும் அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இதைத் தடுக்க முடியாமல்தான், நீதிமன்றம் வாயிலாக கவுன்சிலர்கள் பதவியேற்பைத் தள்ளிப்போட தி.மு.க முயற்சி செய்தது. ஆனால், அது பலிக்கவில்லை."

''இந்தத் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு... இரண்டு கட்சிகளும் உற்சாகமாக அறிக்கை வெளியிடுகின்றனவே?''

''பணம், அதிகாரம், அதிகாரிகள் ஒத்துழைப்பு எனப் பல விஷயங்களைத் தாண்டி, அ.தி.மு.க-வைவிட அதிக இடங்களைப் பிடித்திருப்பதில் தி.மு.க தலைமைதான் உற்சாகத்தில் இருக்கிறது. நகர்ப்புறத்தில் தேர்தல் நடத்தினால் இதைவிட இரட்டிப்பு வெற்றி கிடைக்கும் என்று ஸ்டாலின் உற்சாகமாகியிருக்கிறாராம்.''

மாவட்ட கவுன்சிலருக்கு ரூ.1 கோடி வரை... உள்ளாட்சி பேரம் பின்னணி!

- க்ரைம் சீரியல்களை விஞ்சிவிடும் உள்ளாட்சி உள்விவகாரங்களை கட்சி, மாவட்ட வாரியாக அம்பலப்படுத்தும் ஜூனியர் விகடன் கழுகார் பகுதியை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: உள்ளாட்’ச்சீ’ வியாபாரம்! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-jan-12

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9