Published:Updated:

`கிராமப்புற அமைப்புகளுக்கு மட்டுமே வெளியான தேர்தல் அறிவிப்பு!’ - மாநகராட்சிகளுக்கு எப்போது?

இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த விவகரத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், வரும் `டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்' என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

இதனிடையே, புதிதாக உருவான மாவட்டங்களில் தொகுதி மறுசீரமைப்பு செய்யாமல் தேர்தலை நடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

`கிராமப்புற அமைப்புகளுக்கு மட்டுமே வெளியான தேர்தல் அறிவிப்பு!’ - மாநகராட்சிகளுக்கு எப்போது?

அப்போது பேசிய ஆணையர் பழனிசாமி, ``தமிழகத்தில் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தினங்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். வரும் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் டிசம்பர் மாதம் 13-ம் தேதி. இருகட்டங்களாக பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி எண்ணப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. மற்றபடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. சில நிர்வாக காரணங்களுக்காக இந்தத் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.