Published:Updated:

`உலகப் பொதுமறை மீது ஆணை; துண்டு பிரசுரங்களில் மீம்ஸ்!’ - கோவையில் வேட்பாளரான மீம் க்ரியேட்டர்

கோவையில் 21 வயதான மீம் க்ரியேட்டர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மீம் க்ரியேட்டர்
மீம் க்ரியேட்டர்

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பிரதான கட்சிகளைத் தவிர்த்து பல சுயேச்சை வேட்பாளர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் நீலாம்பூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 21 வயதான நாகர்ஜூன் என்ற கல்லூரி மாணவர் போட்டியிடுகிறார். கல்லூரி மாணவரான இவர், ஒரு மீம் க்ரியேட்டர்.

மீம்
மீம்

இதைத் தனது பிரசார துண்டறிக்கைகளிலும் குறிப்பிட்டுள்ளார். நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளரும் இவர்தான்.

நாகர்ஜூனிடம் பேசினோம், ``அப்பா ஸ்பின்னிங் மில்ல வேலை பார்க்கிறார். அம்மா ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. பி.எஸ்.ஜி காலேஜ்ல முதுநிலை இதழியல் படிச்சுகிட்டு இருக்கேன். சில நாளிதழ்கள்ல பயிற்சி பெற்றிருக்கேன். ஓட்டு கேட்டு வரும் வேட்பாளருங்க, ஜெயிச்சதுக்கு அப்பறம், வேற மாதிரி மாறிடறாங்க.

வேட்பாளர்
வேட்பாளர்

கடந்த ஒரு வருஷமாவே உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆய்வு பண்ணிகிட்டு இருந்தேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரங்கள் பற்றி படிச்சு இருக்கேன்.

`உதயசூரியன் சின்னத்தை எப்படி ஒதுக்கலாம்?’- தேர்தல் அதிகாரியை ஓட ஓடத் தாக்கிய கடலூர் அ.தி.மு.க-வினர்

தேர்தல் அறிவிப்பு வர நேரத்துல, சரியா எனக்கு 21 வயசு. தேர்தல்ல போட்டியிட அந்தத் தகுதி போதும். இதுவே 2016-ல தேர்தல் நடந்திருந்தா, இப்போ நான் போட்டியிட்டிருக்க முடியாது. இந்த வாய்ப்ப சரியா பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டு வரணும்னு இறங்கிட்டேன்.

மீம்
மீம்

ரொம்ப வருஷமா பார்ட் டைம் ஜாப் பார்த்துகிட்டு இருந்தேன். அதுலதான் தேர்தல் செலவு பண்றேன். நீலாம்பூர் ஊராட்சில மூன்றாவது வார்டு உறுப்பினருக்காக சீப்பு சின்னத்துல போட்டியிடுறேன்.

பிரசாரத்துக்கு போறப்ப மக்கள் பலரும், `நீயாப்பா வேட்பாளர்... ரொம்ப சின்ன பையனா இருக்கீயே?’ அப்படீன்னு எல்லாம் கேட்கிறாங்க. அவங்களுக்கு தெளிவாகப் பேசி புரிய வைப்பேன். என்னோட துண்டு பிரசாரங்களும் அவங்களை தெளிவுபடுத்திரும்.

மீம்
மீம்

அதுக்கப்புறம், `சரி தம்பிக்கு எல்லாம் தெரியுது’னு மக்களே எனக்கு ஓட்டுப் போடுற மனநிலைக்கு வந்துட்டாங்க. களத்துல பாசிட்டீவான சூழ்நிலைதான் நிலவுது” என்றார்.