Published:Updated:

`உள்ளாட்சியில் ஆர்வம் காட்டாத இளம் வாக்காளர்கள்'- தமிழகத்தில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்ட நீலகிரி!

Polling
Polling

பெரும்பாலான கிராமப் பகுதிகளில் இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதியவர்களையும் வயதானவர்களையும் மட்டுமே காண முடிந்தது.

நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த இரு ஒன்றியங்களில் 40,094 ஆண் வாக்காளர்கள், 43,629 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 83,723 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 55,139 பேர் வாக்களித்தனர். 28,584 பேர் வாக்களிக்கவில்லை. முதற்கட்ட தேர்தலில் 65.86 சதவிகிதம் வாக்களித்துள்ளனர்.

Polling
Polling

இரண்டாம் கட்டமாக ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு ஒன்றியங்களிலும் 77,679 ஆண் வாக்காளர்கள், 82,661 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,60,344 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இறுதி நிலவரப்படி 1,02,944 பேர் மட்டுமே வாக்களித்தனர். 57,400 பேர் வாக்களிக்கவில்லை. ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் 64.20 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

Polling
Polling

நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்டங்களிலும் 85,954 பேர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் இரு கட்ட வாக்குப்பதிவிலும் வாக்கு சதவிகிதம் கணிசமாக சரிந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளால் தேர்தல் நடைபெறுமா, நடைபெறாதா எனத் தொடர்ச்சியாக நீடித்த குழப்பம், குறைந்த கால அவகாசத்தில் தேர்தலை நடத்தியது. ஓரே கட்டமாகத் தேர்தலை நடத்தாமல் இரு கட்டமாகத் தேர்தலை நடத்தியது போன்ற பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது எனத் அரசியல் அமைப்புகள் கருதுகின்றனர்.

Polling
Polling

இது குறித்து கூடலூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம், ``நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இங்குள்ள இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கோவை, திருப்பூர், உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். கிராமப்புறங்களில் கவுன்சிலர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் என்பதால், அவர்கள் வாக்களிக்க வரவில்லை. மேலும், பெரும்பாலான கிராமப் பகுதிகளில் இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதியவர்களையும் வயதானவர்களையும் மட்டுமே காண முடிந்தது.

வாக்கு சதவிகிதம் குறைந்தது குறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``நீலகிரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொடர்ந்து பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்த தேர்தலிலும் அதேபோல் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இருப்பினும் வாக்கு சதவிகிதம் குறைந்தது ஏன் என்று தெரியவில்லை" என்றார்.

Polling
Polling

இதுதவிர அரசு ஊழியர்கள் பலருக்குத் தபால் வாக்குகள் முறையாக இல்லாததது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் இரு கட்ட தேர்தலிலும் வாக்குப்பதிவு 65 சதவிகிதத்தைத் தாண்டவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு