Published:Updated:

``கார் என்று நினைத்து ஓட்டுப் போட்டுவிட்டேன்!” - வேட்பாளரின் புகாரால் தேனியில் மறு வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டுக்கு மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டுக்கு மட்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர் உப்புக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்த ராசு. 8வது வார்டில் மொத்தம் நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், வாக்குச்சீட்டில் தனது சின்னம் பொறிக்கப்படவில்லை என ராசு கூறிய புகாரால், மாவட்ட நிர்வாகமே அதிர்ந்தது.

`அது ஸ்டாலினுக்கே தெரியாது!'- தேனி பிரச்சாரத்தில் ஆவேசமான ரவீந்திரநாத் குமார்

ராசுவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய கார் சின்னத்தை விட்டுவிட்டு, மூன்று வேட்பாளர்களின் சின்னங்களை மட்டும் அச்சிட்டு மாலை 4 மணி வரை தேர்தல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்டக் கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் ராசு புகார் கூற, மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது.

உப்புக்கோட்டை 8வது வார்டில், ஆண்கள் 216 பேரும் பெண்கள் 203 பேரும் என மொத்தம் 419 வாக்காளர்கள் உள்ளனர். வாக்கு செலுத்த வரும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.

ராசு
ராசு
கரன்ட் இல்லை… பெயர் இல்லை… தேர்தலில் புலம்பிய தேனி மக்கள்!

மறு வாக்குப்பதிவு குறித்து வேட்பாளர் ராசு கூறும்போது, ``எனக்கு இடது கண்ணில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று என்னுடைய சின்னமான கார் சின்னம் போல இருந்ததால், கவனிக்காமல் வாக்களித்துவிட்டு வந்தேன். என்னுடைய உறவுக்காரர்கள், நண்பர்கள் அனைவரும், `கார் சின்னம் சீட்டில் இல்லை’ எனக் கூறினார்கள். பின்னர், பூத்துக்குள் சென்று வாக்குச்சீட்டில் பார்த்தேன். அவர்கள் சொன்னதுபோல என்னுடைய கார் சின்னம் மட்டும் சீட்டில் இல்லை. இது தொடர்பாகக் கலெக்டரிடம் புகார் கூறினேன். அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். அதனால், இப்போது மறு வாக்குப்பதிவு நடக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு