Published:Updated:

`உள்ளாட்சித் தேர்தலுக்கு அஞ்சுவது தி.மு.க-தான்!' - மக்கள் கருத்து #VikatanPollResults

நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து மக்களின் கருத்து என்ன? இந்தத் தேர்தலுக்கு அதிகம் அஞ்சுவது யார்? #VikatanPollResults

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. தி.மு.க தரப்பு வாதத்தில் ``இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை" எனக் கூறப்பட்டது. அதற்கு அரசு தரப்பில், ``தி.மு.க தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் பொய்" என எதிர்வாதம் வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ``உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர்களுக்குப் பயம் இருக்கிறது" என இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் HELO பக்கங்களில் கேட்கப்பட்ட Poll-ன் முடிவுகள்.

மிஸ்டர் கழுகு: உள்ளாட்சி ரேஸ் -  சாமி ² வியூகம்! - எடப்பாடி ரெடி... எதிர்க்கட்சிகளுக்கு வெடி!

உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிகம் அஞ்சுவது யார்? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்கள் அளித்த பதில்கள்.

உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults
உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults
உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults

விகடனின் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults
உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults

விகடன் தளத்தில் நடத்தப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults
உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults

மொத்ததில் 34.31% பேர் உள்ளாட்சித் தேர்தலுக்கு தி.மு.க-தான் அஞ்சுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்தப்படியாக மிக நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் 33.55% பேர் அ.தி.மு.க-தான் அஞ்சுவதாக பதில் அளித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults
உள்ளாட்சித் தேர்தல் #VikatanPollResults
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யுங்கள்!