Published:Updated:

முதலில் ஊராட்சி... பிறகு நகர்ப்புறம்... அ.தி.மு.க `முடிவு'க்குப் பின்னால்?

ஊராட்சி
ஊராட்சி

தி.மு.க தலைமையிடமிருந்து முதலில் வழக்கறிஞர்களிடம் 'தேர்தலை நிறுத்த முடியுமா?' எனக் கேட்கப்பட்டதாம். அதற்கு, 'நிறுத்தலாம். ஆனால், அதைவைத்தே அ.தி.மு.க தரப்பு நம்மை பகடைக்காயாக மாற்றிவிடும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது

"உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துவிட்டார்களே?"

முதற்கட்டமாக நடத்தப்படும் ஊராட்சித் தேர்தல்களில் 70 சதவிகித இடங்களைப் பிடித்தால் மட்டுமே அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்த ஆளுங்கட்சித் தரப்பு முடிவு எடுத்திருக்கிறதாம். இல்லையென்றால், வெறும் ஊராட்சிப் பதவிகளோடு தேர்தலை நிறுத்திக்கொள்வது எனத் திட்டமிட்டுள்ளனர். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2Rf7otI

ஒருவேளை, இவர்கள் நினைப்பதுபோல் கணிசமான இடங்களைப் பிடித்தால், ஜனவரியின் முதல் பத்து நாள்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதியை வெளியிட இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேசமயம், ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்துவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் பிரிவு 9-ன்படி செல்லாது. இதை எதிர்த்து யாரேனும் நீதிமன்றம் சென்றால் தேர்தல் மீண்டும் கேள்விக்குறியாகும்."

தி.மு.க தலைமையிடமிருந்து முதலில் வழக்கறிஞர்களிடம் 'தேர்தலை நிறுத்த முடியுமா?' எனக் கேட்கப்பட்டதாம். அதற்கு, 'நிறுத்தலாம். ஆனால்,

"தி.மு.க என்ன நினைக்கிறதாம்?"

"பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் வழங்குவது, சாமானிய வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வலுவில்லாத மாவட்டங்களில் ஆட்களைச் சரிகட்டி ஒன்றிய, மாவட்ட சேர்மன் பதவிகளை அ.தி.மு.க வாரிச்சுருட்டிவிடும் என்பதுதான் தி.மு.க-வின் கலக்கத்துக்குக் காரணம். இதன்மூலம் மக்களிடம் 'ஆட்சிக்கு எதிராக எந்த எதிர்ப்பும் இல்லை' என நிறுவ முயற்சிப்பார்கள் என தி.மு.க தலைமை கருதுகிறதாம்."

"ஓஹோ!"

"தி.மு.க தலைமையிடமிருந்து முதலில் வழக்கறிஞர்களிடம் 'தேர்தலை நிறுத்த முடியுமா?' எனக் கேட்கப்பட்டதாம். அதற்கு, 'நிறுத்தலாம். ஆனால், அதைவைத்தே அ.தி.மு.க தரப்பு நம்மை பகடைக்காயாக மாற்றிவிடும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.' ஐ.பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர், விரைவில் முறைப்படி ஸ்டாலினைச் சந்திக்க இருக்கிறார். இதற்குப் பிறகே தி.மு.க-வுக்கான தேர்தல் பணிகளை முழுவீச்சில் ஆரம்பிக்கவுள்ளதாம் பிரசாந்த் கிஷோர் நிறுவனம்."

- "குட்கா வழக்கு வேகமெடுக்கிறதே?", "ஜெயலலிதாவுக்குத் திதி கொடுத்தாராமே அ.தி.மு.க தலைவர் ஒருவர்?", ஆவினில் அடுத்த ஆட்டம், ஆளுங்கட்சி மீது பெண்கள் அதிருப்தி உள்ளிட்ட பல உள்விவகாரத் தகவல்களை அடுக்கிறார் கழுகார். அவற்றை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: ஜெயலலிதாவுக்குத் திதி... சத்தமில்லாமல் செய்துகாட்டிய பன்னீர்! இங்கே க்ளிக் செய்க... http://bit.ly/2Rf7otI

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

தமிழக அரசை எச்சரிக்கும் குளித்தலை இளைஞர்கள்!

அடிப்படை வசதிகளைச் செய்து தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது, ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஓர் உத்தி. ஆனால், "கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் 20 அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், 24 வார்டுகளிலும் பொது வேட்பாளராகக் களமிறங்குவோம்'' என்று எச்சரிக்கைவிடுத்திருக்கிறது இளைஞர் அமைப்பு ஒன்று.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் 200 பேர் இணைந்து, 'குளித்தலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு' என்ற அமைப்பைத் தொடங்கி, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது இளைஞர்கள் சிலருடன் உருவான இந்த அமைப்பு, இப்போது விருட்சமாக வளர்ந்துள்ளது.

முதலில் ஊராட்சி... பிறகு நகர்ப்புறம்... அ.தி.மு.க `முடிவு'க்குப் பின்னால்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இரண்டாயிரம் இளைஞர்களைத் திரட்டி, குளித்தலையில் பிரமாண்டமான பேரணியை நடத்தியவர்கள் இந்த அமைப்பினர். திருச்சி, கரூர் மாவட்டங்களைத் திகைக்கவைத்தது அந்தப் போராட்டம். குளித்தலை நகருக்குள் வராமல் பைபாஸில் மட்டுமே விரைந்த அரசுப் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக குளித்தலை நகருக்குள் அரசுப் பேருந்துகள் வந்து செல்கின்றன. குளித்தலை கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட, எம்.பி டி.கே.ரெங்கராஜனிடம் 25 லட்சம் ரூபாய் நிதி பெற்றார்கள். குளித்தலை - முசிறி பெரியார் பாலத்தில் தங்களது போராட்டம் மூலம் மின்விளக்குகள் பொருத்தவைத்தார்கள். இப்படி இந்த இளைஞர்கள், போராட்டங்கள்மூலம் சாதித்தவை ஏராளம்.

- இந்த இளைஞர்கள் குறித்த ஜூனியர் விகடன் இதழின் முழுமையான கவரேஜுக்கு > 20 பிரச்னைகள்... 24 பொது வேட்பாளர்கள் தயார்

https://www.vikatan.com/news/politics/kulithalai-youngsters-decided-contest-to-local-bodies-election

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு