கட்டுரைகள்
Published:Updated:

லாக்டெளன் போட்டிகள்!

லாக்டௌன் அனுபவம்.
பிரீமியம் ஸ்டோரி
News
லாக்டௌன் அனுபவம்.

லாக்டௌன் அனுபவம்.

துவரை வாழ்க்கையில் நாம் சந்தித்திராத அனுபவத்தை இப்போது சந்திக்கிறோம். அலுவலகம் செல்ல முடியவில்லை. பீச், பார்க், சினிமா, ஷாப்பிங் மால் என்று சுற்றித்திரியும் வாழ்க்கையை மறந்தேபோய்விட்டோம். நண்பர்களை, உறவினர்களைச் சந்திக்க முடியவில்லை. டீக்கடைகளில் அரட்டை அடிக்கவோ ஹோட்டல்களில் வெளுத்துக்கட்டவோ வாய்ப்பில்லாத சூழல். இந்த லாக்டௌன் அனுபவங்கள் உங்களுக்குள் எத்தனை எத்தனையோ உணர்வுகளை உசுப்பிவிட்டிருக்கும். உங்கள் படைப்பாற்றலைப் பட்டைதீட்ட, கற்பனைவளத்துக்குக் களம் அமைக்க நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம். லாக்டௌன் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 10 செகண்ட் குட்டிக்கதைகளை lockdownstories@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அதிகபட்சம் 30 வார்த்தைகள்தான். பிரசுரமாகும் கதைகளுக்குத் தகுந்த பரிசு உண்டு.

லாக்டௌன் அனுபவம்.
லாக்டௌன் அனுபவம்.

துவும் லாக்டௌன் போட்டிதான். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே நீங்கள் செய்த வித்தியாசமான வேலைகள் குறித்த புகைப்படத்தை lockdownstories@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தோசை சுடுவது, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வழக்கமான வேலைகளைப் புகைப்படங்களாக அனுப்ப வேண்டாம். பார்த்தவுடனே அசர வைக்கவேண்டும். பிரசுரமாகும் புகைப்படங்களுக்குத் தகுந்த பரிசு உண்டு.