தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வீட்டுக்குள்ளே ஓர் உலகம்!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

நேற்று இல்லாத மாற்றம்

144... ஏப்ரல் 14, மே 3 என்று கொரோனாவுக்கான தடைக்காலம் நீண்டுகொண்டே போகிறது ஒருபக்கம் என்றால், ஒட்டுமொத்த குடும்பமும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை மறுபக்கம். என்ன நினைக்கிறார்கள் நம் இல்லத்தரசிகள்?
வீட்டுக்குள்ளே ஓர் உலகம்!

பத்மா - திருச்சி

“சீரியல் இல்லை... டி.வி-யில போட்ட படத்தையே போடுறாங்க. மனசளவுலயும் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கிற மாதிரி இருக்குது. அதனால மதிய வேளைகளில் தாயம், பல்லாங்குழின்னு பாரம்பர்ய விளையாட்டு, தையல் வேலை, புத்தகம் வாசிக்கிற துன்னு எனக்கான நேரத்தை எடுத்துக்கிறேன். பசங்க வீட்ல இருக்கிறதனால, நான் எப்பவும் கிச்சன்ல இருக்கிற மாதிரியே ஃபீல் ஆகுது. ஆனா, இப்போதானே வயிறார சாப்பிட முடியும்... ஸ்கூல் திறந்துட்டா இப்படியெல்லாம் சமைச்சுக் கொடுக்க முடியாதே... இதை நெனச்சுட்டு அவங்க கேட்டதையெல்லாம் செய்து கொடுக்கிறேன். இரவு ஏழு மணிக்கு மேல குடும்பமா மாடியில உட்கார்ந்து கொஞ்ச நேரம் செலவழிக்கிறோம்.''

வீட்டுக்குள்ளே ஓர் உலகம்!

கனகா - சென்னை

``அஞ்சு வயசுக்குட்பட்ட என் குழந்தைகளை தினமும் என்கேஜ்டா வைக்கிறதுதான் பெரிய சவாலா இருக்கு. அதுக்காக தினமும் யோசிக் கிறேன். மத்தபடி சாப்பிடுறது, குளிக்கிறதுன்னு அவங்க வேலைகளை அவங்களே செய்றாங்க. ஸ்கூல் திறக்கிறப்ப இதெல்லாம் எனக்கு உதவியா இருக்கும். குழந்தைகளுக்கு கேட்ஜெட்ஸ் கொடுக்கக் கூடாதுங்கிறதில் நானும் கணவரும் ரொம்பவே உறுதியா இருக்கோம். அவங்க போர் அடிக்குதுன்னு சொல்லிட்டா போதும்... உடனே கதை சொல்றது, விளையாடுறதுன்னு ஆரம்பிச்சிடுறோம். மத்தபடி மீம்ஸ்ல வர்ற மாதிரியே கணவர்கூட சண்டை வந்து உடனே சமாதானமும் ஆகிடுறோம். முன்பைவிட அந்நியோன்யம் அதிகமா தான் ஆகிட்டிருக்கு!''

வீட்டுக்குள்ளே ஓர் உலகம்!

நிஷா- அருப்புக்கோட்டை

“எனக்கு ரெண்டு பசங்க. டி.வி, செல்போன் பக்கம் அவங்க திரும்பாம இருக்க, வீட்ல உபயோகம் இல்லாமல்போன வாட்டர் பாட்டில், குடம், தண்ணீர் கேன்ல செடி வளர்க்க ஆரம்பிச்சோம். யார் விதை போடுறது, யார் தண்ணீர் ஊத்தணும், சாண உரம் யார் சேகரிக்கணும்னு ரெண்டு பசங்களும் பிரிச்சுக்கிட்டு வேலை பார்க்கிறாங்க. தக்காளி, புதினா, தூதுவளை, அரைக்கீரை போட்டிருக்கோம். விதை தூவினதுல இருந்து என்னவெல்லாம் நடக்குதுங்கிறதை நோட்டுல குறிச்சு வெச்சுட்டே வர்றாங்க. மொத்தத்துல சேட்டைகள் குறைஞ்சு உபயோகமா மாறியிருக்கு, இந்த நாள்கள்!''

வீட்டுக்குள்ளே ஓர் உலகம்!

வேணி - ஶ்ரீவில்லிபுத்தூர்

``அரசு ஊழியர் நான். தினமும் காலையில் எட்டு மணிக்குப் போனா, திரும்பி வர்றதுக்கு சாயந்திரமாகிடும். எப்போதும் பரபரப்பாக இருந்த என் உலகத்துக்கு இப்போ கொஞ்சம் ஓய்வு கிடைச்சிருக்கு. வீட்டைச் சுத்தம் செய்றது, தேவையில்லாத பொருள்களைக் கழிப்பது, குழந்தைகள் கேட்பதைச் செய்து கொடுக்கறதுன்னு மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்றேன். குழந்தைகளும் கணவரும் வீட்டில் இருப்பதால் லேட்டா எழுந்து நினைச்ச நேரத்துக்குச் சாப்பிட வர்றதுன்னு இருந்தாங்க. அதனால் ஆரம்பத்தில் சில நாள் கிச்சன்ல வேலை இருந்துட்டே இருந்த மாதிரி இருந்துச்சு. இப்போ புத்தக அலமாரி, பைக் சுத்தம், வாட்டர் டேங்க் க்ளீன் பண்றதுன்னு ஆளுக்கு ஒரு வேலையைப் பிரிச்சுக் கொடுத்திருக்கேன்.

10 - 12 மணி வரை படிப்பு, அதுக்கப்புறம் கேரம், செஸ் விளையாடறதுன்னு அவங்களுக்கான நேரத்தை பிரிச்சுச் செயல்படுத்தப் பழக்கியிருக்கேன். வீட்டு வேலைகள் சீக்கிரம் முடிச்சுட்டு குழந்தைகளோடு சேர்ந்து நிறைய நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. மனசு ரிலாக்ஸா இருக்கு.''

வீட்டுக்குள்ளே ஓர் உலகம்!

சுதாந்திகா - சீர்காழி

“என் பொண்ணு, வார விடுமுறையில் வெளியில சுத்துறதுன்னு இருந்த எனக்கு இந்த லாக் டெளன் கொஞ்சம் சிரமமாதான் இருக்கு. ஆனா ஒண்ணு... காலையில அலறியடிச்சு எழுந்து சமைக்கணும்கிற டென்ஷன் இல்லை. வேலைகளை நானும் அவரும் பகிர்ந்துகிறோம். அவர் குழந்தையோட நிறைய நேரம் செலவிடறார். மொத்ததுல பாட்டு, டான்ஸ், ஒண்ணா சேர்ந்து சாப்பிடுறதுன்னு நல்லா பொழுது போகுது. வீட்டுக்குள்ள இப்படியோர் உலகம் இருக்கு என்கிறதை இப்போதான் உணர்ந்திருக்கேன். அதே நேரம் டி.வி-யில சீரியல் இல்லாதது போரடிக்குது.''