Published:Updated:

மதுரை: `பெற்றோர் அளித்த ஊக்கம்!’ - சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத்திறன் மாணவி

பூரண சுந்தரி
News
பூரண சுந்தரி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

வங்கியில் பணியாற்றிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து படித்து வந்தார். 4-வது முறையாக 2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய நிலையில்தான் 286-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

Published:Updated:

மதுரை: `பெற்றோர் அளித்த ஊக்கம்!’ - சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத்திறன் மாணவி

வங்கியில் பணியாற்றிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து படித்து வந்தார். 4-வது முறையாக 2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய நிலையில்தான் 286-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

பூரண சுந்தரி
News
பூரண சுந்தரி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பூர்ணசுந்தரிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. இதைத் தங்களது வெற்றியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி வெற்றி பெற்றுள்ளார்.

பூரண சுந்தரி பெற்றோர்
பூரண சுந்தரி பெற்றோர்
ஈ.ஜெ.நந்தகுமார்

முருகேசன் - ஆவுடைதேவி தம்பதியின் மகள் பூரணசுந்தரிக்கு 5 வயதில் திடீரென்று பார்வையை முழுமையாக இழந்தார். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் கவலையுடன் சோர்ந்து முடங்கி விடாமல், பெற்றோரின் அன்பாலும் நம்பிக்கையாலும் பள்ளியில் சேர்ந்து நன்கு படித்து ஒன்றாம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக வந்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,092 மதிப்பெண் பெற்று கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றார்.

பெற்றோர் கொடுத்த உத்வேகத்தால் நன்றாகப் படித்த பூரண சுந்தரி, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என உறுதி எடுத்து, போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தியுள்ளார்.

பூரணசுந்தரி
பூரணசுந்தரி
ஈ.ஜெ.நந்தகுமார்

2016-ம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி தேர்வு, வங்கித் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு என அனைத்து போட்டித் தேர்வுகளையும் தொடர்ந்து எழுதி வந்தார். தோல்வியைக் கண்டு அவர் துவளாமல் தொடர்ந்து தேர்வுகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் பணியில் சேர்ந்தார்.

வங்கியில் பணியாற்றிக்கொண்டே தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கு தொடர்ந்து படித்து வந்தார். 4-வது முறையாக 2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய நிலையில்தான், தேசிய அளவில் 286-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

பூரண சுந்தரி
பூரண சுந்தரி
ஈ.ஜெ.நந்தகுமார்

இத்தத் தகவல் கேள்விப்பட்டு பூரண சுந்தரியை நேரிலும் போனிலும் பலர் பாராட்டி வருகிறார்கள். செய்தியாளர்களிடம் பேசியவர், ``பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டு இந்த வெற்றியை அடைய பல சவால்களை சந்தித்தாலும், என் பெற்றோர் எனக்களித்த நம்பிக்கையாலும், எனக்காகக் கஷ்டப்பட்டதாலும் இந்த நிலையை அடைய முடிந்தது. அது மட்டுமல்லாமல் போட்டி தேர்வுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்றபோது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் ஆதரவும் சில நல்ல உள்ளங்கள் செய்த உதவியும் என்னை வெற்றி பெற வைத்துள்ளது. என்னைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறலாம்'' என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

வாழ்த்துகள் பூரண சுந்தரி..!