Published:Updated:

2 மாதங்களாக நாணயங்களை விழுங்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்; அறுவை சிகிச்சையில் திகைத்த மருத்துவர்கள்!

நாணயங்கள்
News
நாணயங்கள்

கர்நாடகாவில், வயிற்றுக்கோளாறு என அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வயிற்றிலிருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியிருக்கின்றனர்.

Published:Updated:

2 மாதங்களாக நாணயங்களை விழுங்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர்; அறுவை சிகிச்சையில் திகைத்த மருத்துவர்கள்!

கர்நாடகாவில், வயிற்றுக்கோளாறு என அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வயிற்றிலிருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியிருக்கின்றனர்.

நாணயங்கள்
News
நாணயங்கள்

கர்நாடகாவில், வயிற்றுக்கோளாறு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் 187 நாணயங்களை அகற்றி திகைத்துப்போன சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரைச்சூர் மாவட்டத்திலுள்ள லிங்சுகூர் நகரில் வசிக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட தியாமப்பா ஹரிஜன் என்பவர், வாந்தி மற்றும் வயிற்றுக்கோளாறு காரணமாக ஹனகல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

அங்கு அவரை பரிசோதனை செய்ததில், அவரின் வயிற்றில் நாணயங்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கும் தயாராகினர். அதைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் மொத்தம் 187 நாணயங்களை அவரின் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் அகற்றினர். இதனைக்கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட நாணயங்கள்!
வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட நாணயங்கள்!

மேலும் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட நாணயங்களின் மொத்த எடை மட்டும் 1.5 கிலோ. பின்னர் இது குறித்துப் பேசிய மருத்துவர் ஈஸ்வர் கலபுர்கி, ``மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர், வாந்தி மற்றும் வயிற்றில் அசௌகரியம் இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், கடந்த 2,3 மாதங்களாக நாணயங்களை விழுங்கிக் கொண்டிருந்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.