Published:Updated:

பெ.மணியரசனுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்; வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

பெ.மணியரசன்
News
பெ.மணியரசன்

பெ.மணியரசனுக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

Published:Updated:

பெ.மணியரசனுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்; வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

பெ.மணியரசனுக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

பெ.மணியரசன்
News
பெ.மணியரசன்

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசனுக்கு கடந்த மூன்று நாள்களாக, தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஏராளமான கொலை மிரட்டல்கள் வருவதாக, நேற்று இரவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடந்து நேற்று இரவு முழுவதும் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஜக்கி வாசுதேவை நிறுவனராகக்கொண்ட ஈஷா யோக மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என பெ.மணியரசன் குரல் எழுப்பியதாலேயே, இவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

பெ.மணியரசனுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்; வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

தமிழ்நாட்டிலுள்ள கோயில்களை, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என ஈஷா யோக மைய நிறுவனத்தின் ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், கோயில் அடிமை நிறுத்து என்ற பெயரில் ஓர் இயக்கத்தையும் தொடங்கினார். இதற்குப் பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. சிலர் ஆதரவும் தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், தமிழ் வழிப்பாட்டு முறை சார்ந்த பல்வேறு ஆன்மிக அமைப்புகளின் தலைவர்கள், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் ஒன்றாக இணைந்து `தெய்வத் தமிழ்ப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பேசிய பெ.மணியரசன் ``இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 40,000 கோயில்களை தனிநபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜக்கி வாசுதேவ் போராட்டம் நடத்துகிறார். தமிழ்நாட்டு கோயில்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டால், பொதுமக்களின் ஜனநாயகரீயான வழிப்பாட்டு உரிமைகள் பாதிக்கப்படுவதோடு, கோயில்கள் சீரழிந்து போகும்’’ என்றார்.

தொடர்ந்து, ``அரசுக்குச் சொந்தமான நிலங்களை முறைகேடாகக் கைப்பற்றி, கோவையில் ஈஷா யோக மையத்தை ஜக்கி வாசுதேவ் உருவாக்கியிருக்கிறார். இதில் ஏராளமான சட்ட மீறல்களை ஜக்கி வாசுதேவ் நிகழ்த்தியிருக்கிறார். மலைவாழ் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜக்கி வாசுதேவ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையிலுள்ள ஈஷா யோக மைய அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பெ.மணியரசனுக்கு தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி, ``கடந்த மூணு நாளா, தெய்வத் தமிழ்ப்பேரவையின் தொலைபேசி எண்ணுக்கு, நிறைய கொலை மிரட்டல்கள் வந்துக்கிட்டே இருக்கு.

`பெ.மணியரசன் எங்கடா இருக்கான்?’னு ஒருமையில் அநாகரிகமான வார்த்தையில் பேசி மிரட்டுறாங்க. முகநூல்லயும் பெ.மணியரசனைக் கடுமையா திட்டி, மிரட்டுறாங்க. இவரோட வீடு எங்க இருக்கும்னு ட்விட்டர்ல எழுதி, தாக்குதல் நடத்தத் தூண்டிவிடுறாங்க. ஈஷா யோக மையத்தை அரசுடமையாக்க வலியுறுத்தி தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் மே-8 தேதி தஞ்சையில் மாபெரும் உண்ணாவிரதப் போரட்டம் நடத்துறோம். அதை நடத்தாவிடாமல் தடுக்கத்தான் இப்படிக் கொலை மிரட்டல் விடுக்குறாங்க. இதுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம். கண்டிப்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்.

ஈஷா யோக மையத்தை அரசுடைமையக்க வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களைக் கண்டிப்பாக நடத்துவோம். தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்தணும்னு பெ.மணியரசன் குரல் கொடுத்தப்பவும் இதே மாதிரி மிரட்டல்கள் வந்துக்கிட்டே இருந்துச்சு. இது மாதிரியான அச்சுறுத்தல்களை மக்கள் ஆதரவோடு, சட்டரீதியாக எதிர்கொள்வோம்’’ என்றார்.