Published:Updated:

கேரளா: அரசு மருத்துவமனை சிகிச்சையில் கவனக்குறைவு... அகற்றப்பட்ட மாணவனின் கை; போலீஸ் விசாரணை!

கை அகற்றப்பட்ட மாணவன் சுல்தான்
News
கை அகற்றப்பட்ட மாணவன் சுல்தான்

தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு கால்மூட்டு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, கேரளத்தில் கால்பந்து விளையாடிய மாணவனின் கை அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Published:Updated:

கேரளா: அரசு மருத்துவமனை சிகிச்சையில் கவனக்குறைவு... அகற்றப்பட்ட மாணவனின் கை; போலீஸ் விசாரணை!

தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு கால்மூட்டு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, கேரளத்தில் கால்பந்து விளையாடிய மாணவனின் கை அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கை அகற்றப்பட்ட மாணவன் சுல்தான்
News
கை அகற்றப்பட்ட மாணவன் சுல்தான்

கேரள மாநிலம், கண்ணூர் தலசேரியை அடுத்த சேற்றம்குந்நு பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரின் மகன் சுல்தான் (17). பாலயாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 30-ம் தேதி, வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடி உள்ளார். அப்போது கீழே விழுந்ததில் சுல்தானின் இடது கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தலச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் சுல்தான். எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், அவரது கையில் இரண்டு எலும்புகள் முறிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் கடந்த 1-ம் தேதி அவருக்கு ஆப்பரேஷன் நடைபெற்றது. அதில் அவரது கை சரியான முறையில் கட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது கையில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அவரது கையை ஆபரேஷன் செய்து அகற்ற வேண்டும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவனை பெற்றோர், தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றினர். அங்கு அவரது கை முட்டியின் கீழ் பகுதி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.

கால்பந்து விளையாடிய மாணவன் சுல்தான்
கால்பந்து விளையாடிய மாணவன் சுல்தான்

``மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகுதான் மருத்துவர்கள், அவருக்கு ஆபரேஷன் செய்யத் தயாரானார்கள். ரத்த ஓட்டம் நின்றுவிட்டதால் கையை அகற்ற வேண்டும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் காட்டிய அலட்சியத்தால்தான் மாணவனின் கையை வெட்டி அகற்றும் நிலை ஏற்பட்டது" என, மாணவனின் தந்தை சுல்தான் குற்றம்சாட்டினர். இதுகுறித்து கேரள முதலமைச்சர் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கும் மாணவனின் தந்தை புகார் அளித்தார்.

இதுபற்றி விளக்கம் அளித்த அரசு மருத்துவ அதிகாரிகள், ``மாணவன் சிகிச்சைக்கு வந்த மூன்றாவது நாள், ரத்தம் உறைதல் என்ற கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் ஏற்பட்டது. அதனால் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரது கையில் வீக்கம் ஏற்பட்டது. அதனால் ஆபரேஷனுக்கு பிறகு கையில் தையல் போட இயலவில்லை. பத்தாவது நாள் கிருமித்தொற்று ஏற்பட்டது எங்கள் கவனத்துக்கு வந்தது. அதன் பின்னர் ரத்தம் வெளியேறும் நிலை ஏற்பட்டது. ரத்தம் நிற்காமல் வெளியேறியதால் மாணவனின் கையை அகற்றுவதை தவிர வேறு வழி இல்லை" என்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு கால்மூட்டு அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால் அவர் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கேரளாவில் கால்பந்து விளையாடிய மாணவனின் கை அகற்றப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மணவனின் கை அகற்றப்பட்ட சம்பவம் குறித்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, ``தலசேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மிக முக்கியப் பிரச்னையாக கருத்தில் எடுத்துள்ளோம். மருத்துவ சிகிச்சையில் அலட்சியமாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார். இதுகுறித்து தலசேரி போலீஸார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.