Published:Updated:

‘STAN ORTHO’ மொபைல் ஆப் - நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்க ஸ்டான்லி மருத்துவமனை புதிய முயற்சி

‘STAN ORTHO’ மொபைல் ஆப் -  நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்க ஸ்டான்லி  மருத்துவமனை புதிய முயற்சி
‘STAN ORTHO’ மொபைல் ஆப் - நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்க ஸ்டான்லி மருத்துவமனை புதிய முயற்சி

எலும்பு நோயாளிகளின் சந்தேகங்களைத் தீர்க்க, புதிய மொபைல் ஆப்பை சென்னையில் உள்ள  அரசு ஸ்டான்லி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

‘STAN ORTHO’ மொபைல் ஆப் -  நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்க ஸ்டான்லி  மருத்துவமனை புதிய முயற்சி

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை  முடநீக்கியல்  மற்றும்  எலும்புமுறிவு  அறுவைசிகிச்சைத்  துறை  சார்பில், எலும்பு தொடர்பான நோயாளிகளின் சந்தேங்களைத் தீர்க்க,  புதிய மொபைல் ஆப்பை இன்று ( மே 30)  தொடங்கியுள்ளது. நீதிபதி  வள்ளிநாயகம்,  ப.சிவக்குமார் சுவாமிகள், மருத்துவமனை முதல்வர் பொன்னம்பலம் ஆகியோர் இதைத் தொடங்கிவைத்து அறிமுகம் செய்தனர். இந்தியாவிலேயே   ஓர் அரசு மருத்துவமனையில், ஒரு துறைரீதியான மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே  முதல் முறையாகும். 

இந்த மொபைல் ஆப்பை மருத்துவமனையின் முடநீக்கியல் மற்றும் எலும்புமுறிவு  அறுவைசிகிச்சைத் துறையின் தலைவர்,  பேராசிரியர் தொல்காப்பியன் தலைமையிலான குழுவினர் உருவாக்கியுள்ளனர். 

‘STAN ORTHO’ மொபைல் ஆப் -  நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்க ஸ்டான்லி  மருத்துவமனை புதிய முயற்சி

இதுகுறித்து பேராசிரியர் தொல்காப்பியன் பேசுகையில், STAN ORTHO எனப்படும் இந்தச் செயலி,  தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் செயல்படும்.  மருத்துவமனையில் இலவசமாகச்  செய்யப்படும் சேவைகளையும் தெரிந்துகொள்ள முடியும். அறுவை சிகிச்சை  மீதான அச்சம்  காரணமாக  ஏராளமான மக்கள்  இன்றும்  நாட்டு வைத்திய முறைகளுக்கு  உட்படுகின்றனர். அவர்களுக்கு  தன்னம்பிக்கையை  உயர்த்த  அறுவைசிகிச்சை முறைகள் முப்பரிமாண காட்சித் தொகுப்பாக (3டி) செயலியில்  வெளியிடப்படுகிறது.  மிக மோசமான விபத்து மற்றும் எலும்பு தொடர்பான நோயாளிகள், சிகிச்சைக்குப் பிறகு பூரண நலம், இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பியவர்களின்  மனநிறைவு  காட்சித் தொகுப்புகள் இந்த ஆப்பில் வெளியிடப்படுகின்றன. செயலியின் முக்கிய அங்கமாக,  மக்களின் பொதுவான  ஐயங்களைத் தீர்க்கும் விதமாக வினா மற்றும்  விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும்,  நோயாளிகள் எந்நேரத்திலும் தங்களுடைய  கேள்விகளைக்  கேட்கவும்  பதிவுசெய்யவும், அதற்கான  தீர்வை அடுத்த 24-48 மணி நேரத்திற்குள்ளாகக் கிடைக்குமாறும்  செய்யப்பட்டுள்ளது.  இந்தச் செயலியை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்றார்.
 

Vikatan