Published:Updated:

``இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லை!''- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

விகடன் விமர்சனக்குழு
``இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லை!''-  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம்
``இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லை!''- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

`ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தண்ணீர்த் தட்டுப்பாடு என்பதே இல்லை’ என அம்மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

``இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லை!''-  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி வணிக நிறுவனங்கள், குடியிருப்பு வாசிகள், விடுதிகள் பெரும்பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. ஐ.டி. நிறுவனங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால், ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யக் கூறியதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் சென்னை மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்து வந்து சிகிச்சை பெறும், பிரதான மருத்துவமனையான ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

``இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லை!''-  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டது. தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மருத்துவமனை டீன் ஜெயந்தி விளக்கமளித்துள்ளார். ``ராஜீவ்காந்தி மருத்துமனையில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் புற நோயாளிகளும், 3500 உள்நோயாளிகளும் சிகிச்சைப்பெற்று நலமாக வீடு திரும்புகின்றனர். இந்தக் கோடைக்காலத்திலும், இங்கு வரும் நோயாளிகளுக்கும், அவர்களுடன்வருபவர்களுக்கும் தண்ணீர் தடையின்றி வழங்கப்படுகிறது.

``இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லை!''-  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

கழிவறைகள் பராமரிப்புப் பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 1020 கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளன. இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடு என்பதேயில்லை. நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள 7 போர்வெல் மூலம் சுமார் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தடையின்றி கிடைக்கிறது. மெட்ரோ குழாய் மூலம் சுமார் 5.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கப்பெறுகிறது. 20 டேங்கர் லாரிகள் மூலம் நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல குடிநீரும் போதுமான அளவில் 24 மணிநேரமும் கிடைக்கிறது” என்று விளக்கமளித்துள்ளனர்.