Published:Updated:

`ஒரே பகுதியில் வசிக்கும் 30 பேருக்கு பாதிப்பு!'- நாகைக்கு அதிர்ச்சி கொடுத்த அம்மை நோய்

அம்மை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சுகாதார நலக்கல்விக் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நாகை மாவட்டத்தில் அம்மைநோயால் 30-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால். அப்பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், பரவாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டோர்க்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவக் குழுவினா் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

வேகமாய் பரவும் அம்மைநோய்
வேகமாய் பரவும் அம்மைநோய்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் நாடோடி சமூகத்தினர் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருசிலருக்கு இருந்த அம்மை நோய் அடுத்தடுத்த நபர்களுக்குப் பரவியுள்ளது. அவர்கள் வசிக்கும் இடத்திலேயே உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலரும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளனர். ஒரே இன மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மை நோய் பரவி வருவதால் இது தெய்வக் குற்றமோ என அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்திவருகின்றனர்.

மேலும், உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவர்களை டாக்டர். சரச்சந்திரன் சந்தித்தார். அம்மை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சுகாதார நலக்கல்விக் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வேகமாய் பரவும் அம்மை நோய்
வேகமாய் பரவும் அம்மை நோய்

``இதுவரை 30-க்கும் மேற்பட்டோருக்கு அம்மைநோய் பாதிப்பு ஏற்பட்டு சரியாகியுள்ளது என்றும், தற்போது 20 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகவும்" மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு