Published:Updated:

``மக்கள் மருந்தகங்கள் மூலம் 800 மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!" - மோடி

பிரதமர் மோடி

``இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகள் திறக்கப்பட்டதன் மூலமாக 13,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இவை வெறும் அரசு மருந்துக் கடைகள் மட்டுமல்ல, சாமானியர்களுக்கான தீர்வு மையங்களாக மாறி வருகின்றன."

``மக்கள் மருந்தகங்கள் மூலம் 800 மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!" - மோடி

``இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகள் திறக்கப்பட்டதன் மூலமாக 13,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இவை வெறும் அரசு மருந்துக் கடைகள் மட்டுமல்ல, சாமானியர்களுக்கான தீர்வு மையங்களாக மாறி வருகின்றன."

Published:Updated:
பிரதமர் மோடி

``மலிவு விலையில் ஜெனரிக் மருந்துகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஜன் ஆஷாதி மையங்கள் (மக்கள் மருந்தகங்கள்) மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்துள்ளனர்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Image by Michal Jarmoluk from Pixabay

`ஜன் ஆஷாதி திவாஸ்' (Jan Aushadi Diwas) நிகழ்ச்சியில் இன்று காணொளி வாயிலாகப் பேசுகையில், ``இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகள் திறக்கப்பட்டதன் மூலமாக 13,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இவை வெறும் அரசு மருந்துக் கடைகள் மட்டுமல்ல, சாமானியர்களுக்கான தீர்வு மையங்களாக மாறி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana - PMBJP) என்பது மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக, இந்திய அரசின் மருந்து துறையால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். இந்த மருந்தகங்களில் விலையுர்ந்த ஜெனரிக் மருந்துகள் மலிவான விலையிலும், பிராண்டடு மருந்துகளுக்கு நிகரான தரத்திலும் செயல்திறனிலும் விற்கப்படுகின்றன. இது மருந்துகளின் விலை குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கியுள்ளது.

Tablets (Representational Image)
Tablets (Representational Image)
Pixabay

புற்றுநோய், காசநோய், சர்க்கரைநோய், இதயநோய் போன்ற பிரச்னைகளுக்குத் தேவையான 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை அரசு நிர்ணயித்து கட்டுப் படுத்தியுள்ளது. ஸ்டென்ட் மற்றும் முழங்கால் மாற்று சிகிச்சையின் விலையையும் கட்டுப்படுத்தியுள்ளது.

ஜெனரிக் மருந்துகளின் பயன்பாடு மற்றும் மலிவு விலை மருந்தகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் `ஜன ஆஷாதி வாரம்' கொண்டாடப்படும்' எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism