Published:Updated:

`சீனாவிலிருந்து திரும்பினர்; கொரோனா அச்சம்!'- தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இருவர்

கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு
கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு எனக் கடந்த வாரம் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

சீனாவையே உலுக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால், அந்நாட்டில், பலியானவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு
கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு

இந்நிலையில், தேனியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

`அன்று ஊசி ஈ.. இன்று குருத்துப்புழு..!’- வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்

தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த 34 வயதான நபர், சீனாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். அதே போல, சின்னமனூர் அருகே உள்ள பல்லவராயன்பட்டியைச் சேர்ந்த 27 வயது மாணவர் சீனாவில் பட்டப்படிப்பு படித்துவந்துள்ளார். இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தொடர் சளித்தொல்லையால் இருவரும் அவதிப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து இருவரும் நேற்று மாலை, கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு எனக் கடந்த வாரம் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா
கொரோனா
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்த 9-ம் வகுப்பு மாணவன்?!

இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன், பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ``இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய முதற்கட்ட சோதனை நடத்தப்படும். இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சோதனை முடிவுகள் வரும் வரை இருவரும் தொடர் கண்காணிப்பில் இருப்பர். இதற்கென பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டு, 24 மணி நேரம் பணியாற்றக்கூடிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

கேரளாவில், பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்ட மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், சீனாவில் இருந்து வந்த தேனியைச் சேர்ந்த இருவர், கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்குமோ என்ற அச்சத்தில் மருத்துவமனை சென்றுள்ள நிலையில், தேனி மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து அச்சம் அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு