Published:Updated:

குஜராத்தில் WHO-வின் பாரம்பர்ய மருத்துவ மையம்; என்ன சிறப்பு?

(Representational Image) ( Pixabay )

உலக அளவில் பாரம்பர்ய மருத்துவத்துக்காக அமைக்கப்பட உள்ள முதல் மற்றும் புற நகர் மையம் இதுவே. இந்த மையம் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பர்ய மருத்துவத்துக்கான உலகளாவிய மையத்தை அமைக்க உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை தேர்ந்தெடுத்தது. அதன் அடிப்படையில் பாரம்பர்ய மருத்துவத்துக்கான உலகளாவிய மையம் (WHO Global Centre for Traditional Medicine - WHO GCTM) மார்ச் 9-ம் தேதியன்று குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகம்
ஆயுஷ் அமைச்சகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக அளவில் பாரம்பர்ய மருத்துவத்துக்காக அமைக்கப்பட உள்ள முதல் மற்றும் புற நகர் மையம் இதுவே. இந்த மையம் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக டிசம்பர் 2021 -ல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (DFG) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. பாரம்பர்ய மருத்துவத்துக்கான உலகளாவிய மையத்தின் மூலம் அதிகம் கவனம் பெறாத நோய்கள், அரிய நோய்கள் பற்றிய மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தபடுவது போன்றவை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பட உள்ளது.

WHO
WHO

``உலகெங்கிலும் ஆயுஷ் அமைப்புகளை நிலைநிறுத்தவும், பாரம்பர்ய மருத்துவம் தொடர்பான உலகளாவிய சுகாதார விஷயங்களில் தலைமைத்துவத்தை வழங்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்” என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism