சினிமா
Published:Updated:

வானில் சுழலும் இசைக்கிரகம்!

பண்டிட் ஜஸ்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்டிட் ஜஸ்ராஜ்

ஓவியம்: கேசவ்

‘`ஓம் நமோ பகவதே வாசு தேவாய’’ என்று அழுத்தமான குரலில் பண்டிட் ஜஸ்ராஜ் பாடத் தொடங்கும் போது அரங்கில் ரசிகர்கள் சிலிர்ப் பார்கள். அண்மையில் தனது 90-வது வயதில் மறைந்த பண்டிட்ஜியின் இந்தப் பாடல்தான் கிருஷ்ணரை அமர வைத்து அழைத்து வரும் வாகனம்.

இந்தியாவிலும் அமெரிக் காவிலும் தனது இசைப் பயணத்தைப் பிரித்து வைத்திருந்தார் ஜஸ்ராஜ். நியூயார்க்கில் ஓர் அரங்கத்துக்கு இவரது பெயர் வைக்கப்பட்டி ருக்கிறது.டொ ரொன்டோ பல்கலைக்கழகம் இந்திய இசையில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு, ஜஸ்ராஜ் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்கி வருகிறது. இவற்றுக்கெல்லாம் மகுடம் மாதிரியாக செவ்வாய், ஜூபிடர் கிரகங்களுக்கு இடையில் உள்ள ஒரு குட்டி கிரகத்திற்கு ‘பண்டிட்ஜஸ்ராஜ்’ என்று பெயர் வைத்தது சர்வ தேச வானசாஸ்திர யூனியன்.

‘`டெலிவிஷன் வந்த பிறகு எனக்குப் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. கிரிக்கெட் டில் மிகச்சிறந்த ஆட்டக் காரர்கள் விளையாடுவதைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டேன்” என்று ஒரு பேட்டியில் கூறிய ஜஸ்ராஜ் விரும்பிப் பார்த்தது விராட் கோலியின் விளையாட்டை.

பத்ம விபூஷண் உட்பட ஏராளமான விருதுகள் வாங்கியவர் ஜஸ்ராஜ். இவை எல்லாவற்றையும்விட பிலி மண்டோரி என்ற தமது சொந்த கிராமத்து மக்கள் அளித்த கௌரவத்தைப் பெரிய விருதாகக் கருதியவர் இவர். கிராமத்தில் ஒரு பூங்கா அமைத்து அதற்கு இவர் பெயரை வைத்துப் பெருமைப்படுத்தியவர்கள், அவர்கள்.

பண்டிட் ஜஸ்ராஜ்
பண்டிட் ஜஸ்ராஜ்

இவருக்கு கிருஷ்ணர் மீது ஈர்ப்பு வந்தது எப்படி``நான் அனுமன் பக்தனாகத்தான் இருந்தேன். அவன் மூலமாக ராமனை அடைந்துவிட நினைத்திருந்தேன். ஒரு நாள் என் கனவில் சிறு குழந்தையாக வந்தார் கிருஷ்ண பகவான். ‘ஜஸ்ராஜ் நீ பாடும்போது என்னை விரைவில் அடைந்து விடுகிறாய்’ என்றார். அதன்பின் கிருஷ்ணனின் பாதங்களைப் பற்றிக்கொண்டுவிட்டேன்” என்றார்.

பண்டிட் ஜஸ்ராஜ் வீட்டில் எப்போதும் குறைந்தது 10 சீடர்களாவது இருப்பார்களாம். வெளியில் யாருக்காவது திறமை இருப்பதைக் கண்டறிந்தால் பயிற்சி கொடுக்க வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார். ஜஸ்ராஜின் இசைப் பரம்பரையை முன்னெடுத்துச் செல்ல நிறைய இசை வாரிசுகள் குடும்பத்துக்கு வெளியேயும் இருப்பது நம்பிக்கை தருகிறது.