Published:Updated:

மத்திய அரசு கையில் எய்ம்ஸ் அமையும் இடம்! சொல்கிறார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு கையில் எய்ம்ஸ் அமையும் இடம்! சொல்கிறார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
News
மத்திய அரசு கையில் எய்ம்ஸ் அமையும் இடம்! சொல்கிறார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மதுரையில் கட்டப்படும் புதிய பல் நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடம் கட்டும்பணியை பார்வையிட்ட சுகாதாரச் செயலர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதுரையில் கட்டப்படும் புதிய பல் நோக்கு சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் கட்டும்பணியைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ''ஜூலையில் மருத்துவமனையை முதல்வர் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  ஒரே இடத்தில் அறுவைசிகிச்சை, உறுப்பு மாற்று அறுவைசிசிச்சை அனைத்தும் நடைபெறும். கேன்சர் நோய்க்கு சிறப்புக் கவனம்கொடுத்து மருத்துவம் செய்ய இங்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவக் கருவிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்மூலம் இடவசதி, விமான நிலைய வசதி, ரயில் நிலையம் உள்ளிட்ட வசதிகள்குறித்த ஆவணங்கள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அமையும் இடம்குறித்து  மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில்,  மருத்துவப் பணிகள் நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுவருகிறது. சுகாதாரத்துறையில் உலக அளவில் மில்லினியம் கோல்டு என்ற இலக்கை 2017ல் அடைய வேண்டும் என்ற நிலையில், 70 சதவிகிதம்  தாயின் இறப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற நிலையில், 66 சதவிகிதம் என்ற நிலையை அடைந்துள்ளோம். தமிழகத்தைப் பொறுத்தவரை இலவச மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டுவருகிறது. மருத்துவ மேல் படிப்பில் கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 70,000 உள்நோயாளிகள் மருத்துவசிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் புன்னகையுடன் பணி செய்ய பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. நோயாளிகளிடம் பணம் வாங்குபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் குற்றச்சாட்டுகள் வரும்போது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 90 சதவிகித பணிகள், நேரடி நியமனம்மூலம் செயல்படுத்தப்படுகிறது'' என்றார் .