Election bannerElection banner
Published:Updated:

`மக்களைத் தேடி காவல்துறை' திட்டம் எங்கே? - டிஜிபி ராஜேந்திரனுக்கு சமூக ஆர்வலர் கடிதம்

`மக்களைத் தேடி காவல்துறை' திட்டம் எங்கே? - டிஜிபி ராஜேந்திரனுக்கு சமூக ஆர்வலர் கடிதம்
`மக்களைத் தேடி காவல்துறை' திட்டம் எங்கே? - டிஜிபி ராஜேந்திரனுக்கு சமூக ஆர்வலர் கடிதம்

`மக்களைத் தேடி காவல்துறை' திட்டம் எங்கே? - டிஜிபி ராஜேந்திரனுக்கு சமூக ஆர்வலர் கடிதம்

ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது  `மக்களைத் தேடி மாவட்ட காவல்துறை' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த பல மாதங்களாகத் தஞ்சை மாவட்டத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படாமலே இருப்பதாகத் தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து இவரிடம் நாம் பேசியபோது ‘’தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவின்பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பொதுமக்களுக்கு பல வகைகளிலும் பயனுள்ளதாக இருந்தது. காவல்துறை சார்பில் மாதந்தோறும் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு உட்கோட்டத்தில் திறந்தவெளியில் மக்கள் குறைத்தீர்ப்புக்கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் உதவி இல்லாமலே சாமானிய மக்கள் காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தங்களது புகார்களையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க இத்திட்டம் உதவியாக இருந்தது.

கும்பகோணம் போலீஸ் சரகத்தில் 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு நடத்தப்படவே இல்லை. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தை முழுமையாக, முறையாகப் பின்பற்ற வேண்டும். 2016-ம் ஆண்டு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ‘ஹலோ போலீஸ்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி 8900071100 என்ற செல்போன் நம்பர் மூலம் பொதுமக்கள் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார்கள் அளிக்கலாம் என அறிவித்திருந்தார். முன்பு இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் அடுத்த சிறிது நேரத்திற்குள்ளாகவே காவல்துறையினர் நேரடியாக வந்து நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த கடந்த சில வாரங்களாக இந்தச் சேவையும் கைவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் இந்த இரு திட்டங்களையும் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் எனத் தமிழக காவல்துறை டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றார்.   

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு