Election bannerElection banner
Published:Updated:

நிர்மலா தேவிக்கும் ஆராய்ச்சி மாணவருக்கும் என்ன தொடர்பு? - ஆதாரங்களைத் தாக்கல்செய்தது சி.பி.சி.ஐ.டி

நிர்மலா தேவி விவகாரத்தில் சிறையில் உள்ள ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சி.பி.சி.ஐ.டி, ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளது.

பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக ஆசைவார்த்தைக் கூறி பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த வாரம் நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நிர்மலா தேவியுடன் கருப்பசாமி குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்களை ஜூலை 11-ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், கருப்பசாமி, நிர்மலா தேவி இருவரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்திருந்தனர். மேலும், விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் பதிவு செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜாமீன் வழங்குவது குறித்து நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு