Election bannerElection banner
Published:Updated:

‘8 கிலோ தங்கநகை பார்சல்; மிளகாய்பொடி டெக்னிக்’- பட்டப்பகல் கொள்ளையால் அதிர்ந்த போலீஸ்

‘8 கிலோ தங்கநகை பார்சல்; மிளகாய்பொடி டெக்னிக்’- பட்டப்பகல் கொள்ளையால் அதிர்ந்த போலீஸ்
‘8 கிலோ தங்கநகை பார்சல்; மிளகாய்பொடி டெக்னிக்’- பட்டப்பகல் கொள்ளையால் அதிர்ந்த போலீஸ்

‘8 கிலோ தங்கநகை பார்சல்; மிளகாய்பொடி டெக்னிக்’- பட்டப்பகல் கொள்ளையால் அதிர்ந்த போலீஸ்

கோவை ஆர்.எஸ்.புரம் மில் சாலையில் செயல்பட்டுவருகிறது, ஏர் (AIR) என்ற தனியார் பார்சல் சர்வீஸ். விமானங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் பணியை மேற்கொள்ளும் இந்த நிறுவனத்தினரும், இந்த நிறுவனத்தின்மூலம் மும்பைக்குத்  தங்க நகைகள் அனுப்பிய 15 நபர்களும், இப்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். 8 கிலோ மதிப்புள்ள  தங்க நகைகள் அடங்கிய 15 பார்சல்களும் கோவை விமான நிலையத்திற்கு எடுத்துச்செல்லும் வழியில் கொள்ளையடிக்கப்பட்டதுதான் அதிர்ச்சிக்கான காரணம்.

இன்று, காலை சுமார் 6 மணி அளவில், 15 பார்சல்களையும் ஏர் நிறுவனத்தின் ஊழியர் ப்ரீத்திவ் சிங் டூ-வீலரில் எடுத்துச்சென்றுள்ளார். அவிநாசி சாலையில் உள்ள  சர்தார் வல்லப பாய் பட்டேல் கல்லூரியைக் கடந்து பீளமேடு காவல் நிலையம் அருகில் அவர் சென்று கொண்டிருந்தபோது,   இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள்,  ப்ரித்திவ் சிங் வாகனத்தை மறித்து, அவர் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி கீழே தள்ளியிருக்கிறார்கள். கீழே விழுந்த  பிரீத்தி சிங் சுதாரிப்பதற்குள்ளாக, அவரிடமிருந்த  8 கிலோ தங்க நகைகள் அடங்கிய 15 பார்சல்களையும் மர்மக் கும்பல் கொள்ளையடித்துக்கொண்டு பறந்தது. 

 பீளமேடு காவல் நிலையத்திற்கு மிக அருகில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம், கோவைவாசிகளைப் பதறவைத்துள்ளது. 8 கிலோ தங்கத்தை பாதுகாப்பாக காரில் எடுத்துச் செல்லாமல் ஏன் டூ-வீலரில் எடுத்துச்சென்றார்கள்? பரபரப்பான அவிநாசி சாலையில் இந்த கொள்ளைச் சம்பவத்தை யாருமே பார்க்கவில்லையா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

இது தொடர்பாக ஏர் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.   ‘ப்ரித்தீவ் சிங் கீழே தள்ளிவிடப்பட்டதில், அவர் உடலில் லேசான காயங்கள் இருப்பதாகவும், சம்பவ இடத்தில்  சிறிய கத்தியையும், செருப்பையும் கைப்பற்றி உள்ளதாகத்  தெரிவித்துள்ள காவல் துறையினர், சம்பவம் நடைபெற்ற பகுதியில்  சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்துவருகிறார்கள்.  இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக  உதவி ஆணையர் பாஸ்கர்,  சோமசேகர் , சோமசுந்தரம், பால்ராஜ் மற்றும் காவல் ஆய்வாளர்   அன்பரசு ஆகியோர் தலைமையில்  5 தனிப்பட அமைத்துத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகத்  துணை ஆணையர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு