Published:Updated:

விமானத்தில் புகைத்த பிரபலம், வைரலான வீடியோ; நடந்தது என்ன?

பாபி கட்டாரியா ( screenshot )

'இந்தாண்டு கட்டாரியா ஜனவரி 23-ம் தேதி துபாயிலிருந்து டெல்லி சென்றார். அப்போது எடுக்கப்பட்டதான் இந்த வீடியோ.’

விமானத்தில் புகைத்த பிரபலம், வைரலான வீடியோ; நடந்தது என்ன?

'இந்தாண்டு கட்டாரியா ஜனவரி 23-ம் தேதி துபாயிலிருந்து டெல்லி சென்றார். அப்போது எடுக்கப்பட்டதான் இந்த வீடியோ.’

Published:Updated:
பாபி கட்டாரியா ( screenshot )

மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கவும், அதிகமாக லைக்குகள் வாங்கவும் தடை விதிக்கப்பட்ட செயல்களை செய்து இணையவாசிகள் சிலர் மாட்டிக் கொள்வதுண்டு.

Aeroplane
Aeroplane

பாபி கட்டாரியா என அழைக்கப்படும் பல்விந்தர் கட்டாரியா, சமூக வலைதளத்தில் பிரபலமானவர். குறிப்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்தவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், இவர் விமானத்தில் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோ பகிரப்பட்ட உடனே பலரின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமில்லாமல், பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, இந்த வீடியோவை குறிப்பிட்டு `இதுபோன்ற ஆபத்தை சகித்துக் கொள்ள முடியாது' என்று கூறினார்.

இந்த விஷயத்தை அறிந்த சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தெரிவிக்கையில், 'இந்தாண்டு கட்டாரியா ஜனவரி 23-ம் தேதி துபாயில் இருந்து டெல்லி சென்றார். அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ. இது பழைய வீடியோ. தற்போது அவருடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ இல்லை. மேலும் இது குறித்து முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளது.