Published:Updated:

தனியார் நிறுவனங்களின் பால் விலை 2 ரூபாய் உயர்வு... கட்டுப்படுத்துமா அரசு?

பால்
News
பால்

சென்னையைப் பொறுத்தவரை 80 சதவிகித டீ, காபி கடைகள் மற்றும் உணவகங்களில் ஆவின் பால் வாங்கப்படுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன பால்களை வாங்கி வருகின்றனர்.

Published:Updated:

தனியார் நிறுவனங்களின் பால் விலை 2 ரூபாய் உயர்வு... கட்டுப்படுத்துமா அரசு?

சென்னையைப் பொறுத்தவரை 80 சதவிகித டீ, காபி கடைகள் மற்றும் உணவகங்களில் ஆவின் பால் வாங்கப்படுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவன பால்களை வாங்கி வருகின்றனர்.

பால்
News
பால்

பல தனியார் பண்ணைகள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளதாகச் சென்னையில் உள்ள அதன் டீலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த 12 மாதங்களில் 5-வது முறையாகப் பால் விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) பழைய லிட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் இருந்து 52 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 62 இலிருந்து 64 ரூபாயாகவும், நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 70 ரூபாயிலிருந்து 72 ரூபாய் ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தயிர் (TM Curd) 72 ரூபாயிலிருந்து 74 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பால்
பால்
pexels

80 சதவிகித டீ, காபி கடைகள் மற்றும் உணவகங்களில் ஆவின் பால் வாங்கப்படுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் வட மாவட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களின் பாலைத்தான் வாங்கி வருகின்றனர். தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வானது காபி, டீ மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருள்களின் விலை கணிசமாக உயர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுச்சாமியிடம் பேசினோம். அவர், ``ஒவ்வொரு முறையும் பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வு எனப் பொய்யான காரணத்தைக் கூறி பால் விலையை அதிகரிக்கிறார்கள். 2019-ல் மூன்று முறை 8 ரூபாய் வரை பால் விலையை உயர்த்தினார்கள். 2020 மார்ச் மாதத்துக்கு முன்பு இரு மாத இடைவெளியிலேயே 6 ரூபாய் வரை இரண்டு முறை விலையை உயர்த்தினார்கள். 

சு.ஆ.பொன்னுச்சாமி
சு.ஆ.பொன்னுச்சாமி

கொரோனா காலகட்ட ஊரடங்கில் பால் விற்பனை குறைந்ததால், கொள்முதல் விலையைக் கடுமையாகக் குறைத்தார்கள். விற்பனை விலையைக் குறைக்கவில்லை. தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை 18 ரூபாய் கொடுத்து வாங்கி லாபம் சம்பாதித்தனர். ஆனால், மக்களுக்கான விற்பனை விலை குறைக்கப்படவில்லை.

2019-ல் கொள்முதல் விலை என்ன இருந்ததோ, அதேதான் இப்போதும் இருக்கிறது. ஆனால், 2019-லிருந்து இப்போது வரை ஒரு லிட்டர் பாலுக்கு 20 ரூபாய் வரை விற்பனை விலையும், தயிருக்கு 30 ரூபாய் வரை விற்பனை விலையும் ஏற்றி இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வு எனக் கூறி விலையை உயர்த்தினாலும், விவசாயிகளுக்கு விலை உயர்வு பணம் கிடைப்பதில்லை.  

வணிக பயன்பாடுகளுக்கு ஆவின் பாலை உணவகங்கள் பயன் படுத்துவதில்லை. பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் பாலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

பால்
பால்

இப்படியிருக்கையில் தனியார் பால் விலை உயர்வு கண்டிப்பாக டீ, காபி, இனிப்பு எனப் பால் சார்ந்த பொருள்களின் விலையை அதிகரிக்கும். திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வல்லபா, சீனிவாசா போன்ற நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. 

தனியார் பால் நிறுவனங்களை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது எனத் தி.மு.க-வினர் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு தான் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். எனவே, தனியார் பால் நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டுமென  மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகனுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.