மத்திய பி.ஜே.பி ஆட்சியாளர்களுக்கு அணுக்கமானவர் என்று அறியப்படுபவர் தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இவற்றையெல்லாம் தாண்டி அடிப்படையில் வெற்றிகரமான தொழிலதிபர்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இன்னும் அதிக அளவில் வேலை இழப்பு ஏற்படும்’’ என்றார். எப்போதும் மத்திய அரசுக்கு இணக்கமாகப் பேசும் பாண்டியராஜனின் இந்தப் பேச்சைக் கேட்டு, அனைவரும் வியப்படைந்தனர். இந்த நிலையில்தான் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் என்ன?’’

“ஆட்டோமொபைல் துறை, நாடு முழுவதும் சரிவைச் சந்தித்துள்ளது. எதிர்வரும் ஐந்து வருடங்களில் நம் நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து வாகனங்களும் மின்சாரத்தால் இயங்குபவையாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை. இதன் காரணமாகவே வாகன உற்பத்தித் தொழில் மோசமான கட்டத்துக்குச் சென்றுள்ளது. வாகன உற்பத்தியில் பெரிய நிறுவனங்களை நம்பி இருந்த ஏராளமான சிறு உற்பத்தியாளர்கள், தொழிலைவிட்டு விலகிவிட்டனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிகம் இருக்கும். ஏனெனில், நம் நாட்டில் மொத்த வாகன உற்பத்தியில் 42 சதவிகிதம் தமிழகத்தில்தான் செய்கிறோம்.’’

“மின்சார வாகன உற்பத்திக்கு மாறுவதில் என்ன சிரமம்?’’

“பெட்ரோல், டீசல் கார்கள் தயாரிக்க 3,000 உதிரிபாகங்கள் தேவை. அதற்கான மிகப்பெரிய கட்டமைப்பு ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால், மின்சார வாகனத் தயாரிப்புக்கு 500 உதிரிபாகங்கள் போதும். கிட்டத்தட்ட 2,500 உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை மூட நேரிடுகிறது. ஆக, தொழில்நுட்பரீதியாக ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அவையெல்லாம் இன்னும் ஐம்பது ஆண்டுகள் நீடிக்கக்கூடிய வகையில் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டவை. ஆனால் மத்திய அரசின் இந்தக் கொள்கையால், அந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் தங்கள் உற்பத்தி மாடலையே மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடி இது.’’

“தீர்வே கிடையாதா... மோட்டார் தொழிலில் நெருக்கடியைத் தீர்க்க என்னதான் செய்வது?’’

“வாகன உற்பத்தியாளர்களின் பொருளாதார வீழ்ச்சியைச் சரிகட்ட தொழில்நுட்ப மாற்றத்துக்கான சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கி, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் மோட்டார் துறை பிழைக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளித் துறையில் இதுபோன்ற ஒரு தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டுவந்தபோது, இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டது. அப்போது இப்படிப்பட்ட நிதியை மானியமாக அளித்தே இழப்பைச் சரிசெய்தார்கள். அதேபோல இப்போது மோட்டார் வாகனத் துறைக்கும் மானியம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், மூன்று மாதங்களிலோ அல்லது ஒரு வருடத்திலோ இந்தத் துறையில் மேலும் மிகப்பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படும். ஏற்கெனவே ஒரு லட்சம் பேர், வேலை இழந்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை அதிகமாகாமல் தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.’’

“சரி, தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?’’

“ஆட்டோமொபைல் தொழிலைக் காக்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது; மத்திய அரசிடமும் மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி வலியுறுத்திவருகிறது. தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘ஆட்டோமொபைல் தொழில், மத்திய அரசு சம்பந்தப்பட்டது. தற்போது இந்தத் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னை பற்றி முதலமைச்சர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதலீட்டாளர்களிடம் ஆலோசனை நடத்திவருகிறார்’ என்றும் கூறியிருக்கிறார். விரைவில் நிலைமை சீரடையும் என நம்புகிறோம்.”