Published:Updated:

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் இனி வீட்டு வரி வசூல்!

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் இனி வீட்டு வரி வசூல்!
கிரெடிட், டெபிட் கார்டு மூலம் இனி வீட்டு வரி வசூல்!

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் இனி வீட்டு வரி வசூல்!

புதுச்சேரியில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வீடு மற்றும் சொத்து வரிகளைச் செலுத்தும் முறையை உழவர்கரை நகராட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சொத்து மற்றும் வீட்டு வரியை, பொதுமக்கள் தங்கள் கிரெடிட், டெபிட் கார்டு மூலமே செலுத்தும் வசதியை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல் முறையாக உழவர்கரை நகராட்சி நடைமுறைப்படுத்தி இருக்கிறது. பாண்ட் ஆஃப் சேல் (Bond of Sale) என்ற இந்த இயந்திரத்தின்மூலம் பணமில்லா பரிவர்த்தனையை எளிதாகச் செய்யலாம்.

இந்தப் புதிய முறையில், பொதுமக்கள் தங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி நகராட்சியின் கணினி மையங்களில் வரிகளைச் செலுத்திக்கொள்ளலாம். மேலும், அப்படி டெபிட், கிரெடிட் கார்டுகள்மூலம் செலுத்துபவர்களுக்கு, எந்த விதமான சேவை வரிகளும் பிடித்தம் செய்யப்படாது. அப்படி வரி செலுத்துபவர்களுக்கு வசதியாக, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் கலெக்‌ஷன் சென்டர் ஒன்று விரைவில் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு