சிறுவனுக்கு வருத்தம். அவனுக்குப் பப்பாளி மரம் பிடிக்கும்.

ஒரு பௌர்ணமி இரவில் அவன் காட்டுக்குள் சென்றான். மரங்கள் அவனை 'இஉய்த்’ என்று அழைத்து வரவேற்றன. மரங்களின் மொழியில், 'மிகச் சிறிய மனிதன்’ என்று பொருள்.

பௌர்ணமி நிலவு மிகவும் பிரகாசமாக இருந்தது. அந்த நேரத்தில்தான் அவற்றின் கொண்டாட்டம் தொடங்கும். முதலில், மரங்கள் கூட்டமாகப் பாடும். கருவாலி மரங்கள், காட்டைச் சுற்றிப் பாதுகாப்புக்கு நின்றன. வேட்டையாடுபவர்கள், மரம் வெட்டிகள் வந்துவிடக் கூடாதல்லவா? யாரேனும் வந்தால், மரங்கள் ஆந்தைபோலக் கத்தி எச்சரிக்கும்.

திறந்தவெளியைச் சுற்றி இளம் மரங்கள் வட்டமாக நின்று நடனமாடத் தொடங்கின. மனிதர்கள் போலவே, கிளைகளால் ஒன்றை ஒன்றைத் தொட்டுக்கொண்டு ஆடின. சிறுவன், அவனைவிட வயது குறைந்த செதார் மரத்துடன்தான் ஆடினான். அந்த ஆட்டமும் பாட்டமும் வெகுநேரம் தொடரும். பெரிய மரங்கள் உரசிக்கொள்ளும்போது இடி இடிக்கும் ஓசை கேட்கும். தங்கள் வயதை மறந்து அவை ஆடும்போது, ஆண்டாண்டு காலமாக இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

நிலவு இடம் பெயரும் வரை அவை ஆடிப்பாடும். மரங்களோடு சிறுவனும் மகிழ்ச்சியாக இருப்பான்.

மரங்கள் அதனதன் இடங்களுக்குச் சென்று தங்களைப் பொருத்திக் கொள்ளும். அவைகளுக்குத் தூங்கும் நேரம் வந்துவிட்டால், சிறுவனும் அவற்றுடன் சேர்ந்து உறங்குவான்.

வயது முதிர்ந்த கருவாலி மரம், இரவு முழுக்கக் கண்விழித்து அவனைப் பாதுகாத்தது. எப்படி இருக்கிறது கதை?

இதை பெ.மார்ட்டின் ஜோசப் மொழி பெயர்த்திருக்கிறார். முழுக் கதையை, மொழி பெயர்ப்புக்கு என வெளிவரும் 'திசை எட்டு’ இதழிலும் வாசிக்கலாம். க்ளேசியாவின் பல படைப்புகளை நாகரத்தினம் கிருஷ்ணா தமிழுக்கு வழங்கி இருக்கிறார்.

நம் 'மலையாளப் பேராசான்’ வைக்கம் முகமது பஷீர், என் நினைவுக்கு வருகிறார். உலகில் சிறந்த எழுத்தாளர் அவர். அவருடைய புகழ்பெற்ற 'இளம் பருவத் தோழி,’ 'மதிலுகள்,’ 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ போன்றவற்றை நாம் அறிந்திருப்போம்.

பஷீரின் சிறந்த கதைகளில் ஒன்று, 'தேன் மாம்பழம்.’ தமிழில் கவிஞர் சுகுமாரன் அதை அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். அந்தக் கதையை என் மொழியோடும் முன் வைக்கிறேன். கதை இப்படித் தொடங்குகிறது... அப்படி அல்ல. நீங்கள் கேள்விப்பட்டது சரியான விஷயம் இல்லை. நான் மரத்தை ஆராதிப்பவன் இல்லை. மரம் மட்டுமல்ல, எந்தப் படைப்பையும். ஆனால், இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியேகமான அன்பு உண்டு. என் மனைவி அஸ்மாவுக்கும் அதன் மேல் பிரியம் உண்டு. மனிதர் ஒருவரின் மகத்தான ஒரு காரியத்தின் அடையாளம் இந்தத் 'தேன் மாம்பழம்.’

கதை சொல்பவரும் கதை கேட்பவரும் அந்த மாமரத்தின் அடியில்தான் அமர்ந்திருக்கிறார்கள். மரத்தில் ஏராளமான மாங்காய்கள் இருந்தன. அடியில் அகலமான வட்டத்தில் வெள்ளை மணல் பரப்பப்பட்டு இருந்தது. அதைச் சுற்றி இரண்டு வரிசை செங்கல் கட்டு வைத்து அதற்குள் வட்டமாக பல நிறங்களிலுள்ள ஏராளமான பூக்கள் உள்ள ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன.

கதை சொல்பவர் ரஷித். மனைவி, மகனுடன் வசிக்கிறார். கணவன் மனைவி இருவரும் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள்.

வீட்டுக்குள்ளிருந்து தட்டு வந்தது. அவர் மனைவி, மாம்பழத்தைச் சீவித் துண்டுகளாக்கி, தட்டில் போட்டு, தம் 16 வயது மகன் கையில் கொடுத்துவிட்டிருந்தார். நாங்கள் உண்ணத் தொடங்கினோம்.

தேன்போல இனிப்பு.

''மாம்பழம் எப்படி?''

''தேன் மாம்பழம்தான்.''

''இதை நாம் சாப்பிட வாய்த்திருக்கிறதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.''

''இதை நட்டது யார்?''

''நானும் என் மனைவி அஸ்மாவும்தான் இதை இங்கே நட்டோம்... என் தம்பி, இங்கேயிருந்து 75 மைல் தூரத்திலிருக்கிற ஒரு பட்டணத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே தங்கியிருந்தேன். ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். வேனிற்காலம். காற்று உஷ்ணமாக இருந்தது. போகும் வழியில் மர நிழலில் ஒரு வயதான மனிதர் சோர்ந்து கிடப்பதைப் பார்த்தேன். தலைமுடியும் தாடியும் ஏகத்துக்கு வளர்ந்திருந்தன. சோர்ந்து களைத்து சாகிற நிலைமை.

என்னைப் பார்த்து 'அல்ஹம் துலில்லாஹ் மக்களே... தண்ணீர்’ என்றார். நான் பக்கத்தில் தென்பட்ட வீட்டில் இருந்த ஓர் இளம் பெண்ணிடம் தண்ணீர் கேட்டேன். ஒரு சொம்பில் தண்ணீர் கொடுத்தாள் அவள். சொம்போடு நான் நடந்ததும், அவளும் உடன் வந்தாள். கிழவருக்குத் தண்ணீர் கொடுத்தேன். கிழவர் எழுந்து ஓர் அற்புதமான காரியம் செய்தார்.

சொம்புத் தண்ணீருடன் எழுந்து பாதை ஓரம் சென்றார். அங்கு வாடித் துவண்டு நின்ற மாங்கன்றுக்கு அடியில் பாதித் தண்ணீரை 'பிஸ்மி’ சொல்லி ஊற்றினார். யாரோ ஒரு வழிப்போக்கன் தின்று வீசிய மாம்பழக் கொட்டை அது. எப்படியோ அது துளிர்த்திருந்தது. வேர்கள் மண்ணுக்கு மேலாக இருந்தன.

கிழவர் மர நிழலில் வந்து அமர்ந்தார். மிச்சம் இருந்த தண்ணீரைப் 'பிஸ்மி’ சொல்லிக் குடித்தார். பிறகு சொன்னார், 'என் பெயர் யூசுப் சித்திக். பக்கீராக உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறேன். உங்கள் பெயர் என்ன?’

நான் சொன்னேன். என் பெயர் ரஷீத். பள்ளி ஆசிரியர். இளம்பெண் சொன்னாள். என் பெயர் அஸ்மா. பள்ளி ஆசிரியர்’ 'நம் எல்லோரையும் அல்லாஹ் ஆசீர்வதிப்பாராக’ என்றபடி யூசுப் சித்திக் படுத்தார். என் கண் எதிரில் அவர் இறந்துபோனார். என் தம்பி உதவியுடன் அடக்கம் செய்தேன். அவர் பையில் ஆறு ரூபாய் இருந்தது. நாங்கள் ஆளுக்கு ஐந்து ஐந்து ரூபாய் போட்டு, மிட்டாய் வாங்கிப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்படி அஸ்மாவிடம் கொடுத்தேன்.

நானும் அஸ்மாவும் திருமணம் செய்துகொண்டோம். அஸ்மா, மாங்கன்றுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். இங்கு வீடு கட்டிக் குடிவரும்போது, செடியை வேர் அறுபடாமல் பறித்து, ஒரு கோணித் துண்டில் மண்ணைப் போட்டு, நானும் அவளும் நீரூற்றினோம். அப்படி இந்த மாமரம் இங்கு வந்தது.'

கதை கேட்டவர் புறப்பட்டார். நடந்தார். பின்னாலிருந்து அழைப்பு. ரஷீதின் மகன் ஒரு காகிதப் பொட்டலத்தில் கட்டிய நான்கு பழங்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னான்.

''மனைவி குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொன்னார்கள்.''

''மகனே, படிக்கிறாயா?''

'காலேஜ்ல படிக்கிறேன்.’

''பேரென்ன?''

''யூசுப் சித்திக்.''

''யூசுப் சித்திக்?''

''ஆமாம். யூசுப் சித்திக்.''

- மழை பொழியும்