புறக்கணிப்பட்ட, தாய் தந்தையரை இழந்த, ஐந்து ஆறு வயதிலேயே உடல் உழைத்து உண்ண வேண்டிய குழந்தைகளை நினைத்துக் கொள்ளுங்கள். சமூகமே வெட்கப்பட வேண்டிய சமூக அவமானம் அல்லவா அது? அநாதை என்ற சொல் ஒரு சமூகத்தில் நிலவ முடியுமா? உலகமே அழிந்து, மிஞ்சி நிற்கிற தன்னந்தனியாக இருக்க நேர்கிற அந்தக் கடைசி மனிதன் தானே அனாதையாக இருக்க முடியும்.

நிர்க்கதியான குழந்தைகள். ஏற்கெனவே நல்லவன் கெட்டவன் என்ற குழப்பமான பிரிப்பு காரணமாகக் கெட்டவர்களால் கண்டெடுக்கப்படுகிறார்கள். மொன்னைச் சட்டங்களாலும், மனசாட்சி செத்த காவலர்களாலும் குழந்தைகள் கிரிமினல்கள் ஆகிறார்கள். அதிகாரத்தில் இருக்கிற கிரிமினல்களால், அப்பாவிகள் கிரிமினல் ஆக்கப்படும் நாடு இது.

நம் ஆத்மாவைத் துடிக்க வைக்கும் இன்னொரு கதை.

இது ஒரு ரஷ்யக் குழந்தை. பெயர் இவான் வாங்கா.

வாங்காவுக்கு வயது ஒன்பது. தந்தை, தாய் இருவரையும் இழந்தவன். தாத்தாவின் பராமரிப்பில் வாழ்பவன். தாத்தா வாட்ச்மேனாக வேலை பார்க்கிறார். அவருக்கு அவரே சுமை. வாங்காவை வைத்துக்கொண்டு எப்படி சோறு போடுவார்? ஆகவே, வாங்காவை செருப்பு தைப்பவன் ஒருவனிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டார். வாங்கா, ஒரு கிறிஸ்துமஸ் அன்று, வீட்டிலுள்ளோர் எல்லோரும் கோயிலுக்குப் போனபிறகு, பயந்து பயந்து தாத்தாவுக்கு தன் நிலைமையைப் பற்றிக் கடிதம் எழுதுகிறான்.

அன்புள்ள தாத்தாவுக்கு...

நான் உனக்கு எழுதும் கடிதம். உனக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும். எனக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. நீ மட்டும்தான்.

வாங்காவின் கண்கள் கலங்கின. தாத்தாவை நினைத்துக்கொண்டான். பேனாவை மையில் தொட்டு அவனுக்குத் தெரிந்த சொற்களில் எழுதினான்.

நேற்று என்னை அடித்தார்கள். என் தலைமுடியைப் பிடித்து இழுத்து, தடியால் அடித்தனர். காரணம் என்ன? அவர் குழந்தையை தொட்டியில் கிடத்தி ஆட்டிக்கொண்டிருந்த நான், களைப்பு காரணமாகத் தூங்கிவிட்டேன். எஜமானி என்னை மீன் கழுவச் சொன்னார். நான் சரியாகச் செய்யவில்லை. எனக்குத் தெரியவில்லை தாத்தா. அந்த மீனை என் முகத்தில் அடித்துத் தேய்த்தான். ஓட்கா வாங்கி வரச் சொன்னான் எஜமான். பிறகு பிறத்தியார் வீட்டுத் தோட்டத்தில் வெள்ளரிக்காய் திருடச் சொன்னார். அதிகமாகத் திருட முடியவில்லை. எஜமான் கையில் கிடைத்ததைக் கொண்டு என்னை அடித்தார். சாப்பாடும் இல்லை. காலையில்தான் எனக்கு ரொட்டி கிடைக்கிறது. மத்தியானம் கொஞ்சம் கஞ்சி. ராத்திரி பழையபடி ரொட்டிதான். டீ, சூப் ஒன்றுமில்லை. இரவு முழுக்க நான் தூங்காமல் தொட்டிலை ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தாத்தா... என்னைக் கிராமத்து வீட்டுக்கு தயவு செய்து அழைத்துப் போய் விடுங்கள். உங்கள் காலைத் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன். உனக்காகக் கடவுளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். என்னை இங்கேயிருந்து கூட்டிச் சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால், நான் செத்துப் போய்விடுவேன்...’

வாங்காவின் வாய் கோணியது. விம்மி விம்மி அழுதான்.

'தாத்தா... உனக்காகப் பொடி அரைத்துத் தருவேன். கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். நான் ஏதாவது தவறு செய்துவிட்டால், ஆட்டை அடிப்பதுபோல என்னை அடி. நான் தேவையற்றவன் என்று நீ நினைத்தால், நான் காரியஸ்தரிடம் போய் அவருடைய பூட்ஸைத் துடைத்துத் தரட்டுமா என்று கேட்பேன் அல்லது ஆடுகள் மேய்ப்பேன். தாத்தா என்னால் தாங்க முடியவில்லை. இது என்ன பிழைப்பு? கிராமத்துக்கு ஓடிப் போகலாம் என்று தோன்றுகிறது. ஆனால் என்னிடம் பூட்ஸ் இல்லையே. பனியை என்னால் பொறுத்துக்கொள்ள முடியுமா? இதுக்காக உனக்கு நான் பதில் உதவி செய்வேன். நீ செத்துப் போனால் உனது ஆத்மா அமைதிகொள்ளப் பிரார்த்தனை செய்வேன். என் அம்மாவுக்குச் செய்ததைப் போல.’

அவன் அழுதுகொண்டே மேலும் எழுதினான்.

எப்படியாவது வா தாத்தா. வந்து என்னை அழைத்துப் போயிடு. என்னைப் போன்ற அநாதையிடம் கருணைக் காட்டக் கூடாதா? இங்கே நான் கஷ்டப்படுகிறேன். ஒரே பசி. நான் படும் கஷ்டம் உனக்குத் தெரியாது. எப்போதும் நான் அழுதுகொண்டே இருக்கிறேன். அன்றைக்கு எஜமான் பூட்ஸ் செய்யும் அச்சுருவால் என் தலையில் அடித்தார். நான் கீழே விழுந்துவிட்டேன். ஒரு நாயை விட மோசமாக இருக்கிறது என் பிழைப்பு. என் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை எல்லோருக்கும் சொல். நான் படும் கஷ்டத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். இப்படிக்கு உன் பேரன் இவான்... அன்புள்ள தாத்தா உடனே வா...’

வாங்கா அந்தக் காகிதத்தை இரண்டாக மடித்தான். முந்தின நாள் ஒரு கோப்பெக் கொடுத்து வாங்கிய கவருக்குள் அடைத்தான். கொஞ்சம் யோசித்துவிட்டு, பேனாவை மையில் தோய்த்து விலாசம் எழுதினான்.

'கிராமத்தில் இருக்கும் தாத்தாவுக்கு.’

தொப்பியைத் தலையில் அணிந்துகொண்டு சட்டை இருந்ததால், கோட் அணியாமல் தெருவில் ஓடினான். அருகில் இருந்த தபாலாபீஸ் சென்று தன் அற்புத கடிதத்தை பெட்டியின் துவாரம் வழியே உள்ளே நுழைத்தான்.

இனிமையான நம்பிக்கைகளுடன் ஒரு மணி நேரத்துக்குப் பின் ஆழ்ந்து தூங்கினான். கனவில் கணப்பு அடுப்பு தெரிந்தது. அடுப்பருகில் தாத்தா உட்கார்ந்துகொண்டு தன் கால்களை ஆட்டியபடி அவன் கடிதத்தை சமையல்காரர்களுக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்...

- மழை பொழியும்