Published:Updated:

மதுரையில் தேசிய மாணவர் படைக்குப் புதிய பயிற்சி அகாடமி

செ.சல்மான் பாரிஸ்
மதுரையில் தேசிய மாணவர் படைக்குப் புதிய பயிற்சி அகாடமி
மதுரையில் தேசிய மாணவர் படைக்குப் புதிய பயிற்சி அகாடமி

மதுரை மாவட்டம்  இடையப்பட்டியில், புதிதாகக் கட்டப்பட்ட தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமி, தமிழக முதல்வரால் சமீபத்தில் காணொளிக் காட்சிமூலம் திறந்துவைக்கப்பட்டது. இந்த அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்களை கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த மாணவர் பயிற்சி அகாடமியில் ஆயுத பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி, ஆங்கில மொழிப் பயிற்சி, செயற்கைப் பாறை ஏறுதல் அமைப்பு  போன்ற வசதிகளையும், இம்மையத்தில் நவீன தங்கும் விடுதி, துப்பாக்கிச் சுடும் தளம், அணிவகுப்பு மைதானம், உள்அரங்கம், உணவு அறை, கலையரங்கம், உயர் அலுவலர்கள் தங்கும் வசதி போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டு, அகாடமி வளாகத்தில் மரக்கன்றை நட்டார். மாணவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். மதுரைக்கு அருகில் அமைக்கப்படுள்ள இதுபோன்ற பயிற்சி அகாடமி, தென்மாவட்டப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது.