படிப்பைத் தாண்டிய சமூக நோக்கத்தை மாணவர்களுக்கு உருவாக்க ஜூனியர் விகடனும், சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் அண்டு மேனேஜ்மென்ட்டும் இணைந்து கல்லூரிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சி 'தமிழ் மண்ணே வணக்கம்.’ விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடு கலைக் கல்லூரியில், கல்லூரி இயக்குநர் ராமானுஜம் தலைமையிலும் இணைச்செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் பேசிய டாக்டர் சிவராமன், ''சாத்தூர் வெள்ளரியையும், காரச்சேவையையும் யாரும் மறக்க முடியாது. ஆனால் பாரம்பர்ய உணவு வகைகளை மறந்து உணவு அரசியலில் நாம் நம்மை தொலைத்து வருகிறோம். நமது உணவுக் கலாசாரம் முழுமையாக சிதைக்கப்படுவதற்குக் காரணம் பரோட்டா, நூடுல்ஸ், மில்க் சாக்லேட் போன்றவைதான். இளைஞர்கள் பட்டாளம் இதைத்தான் கெளரவமாகக் கருதுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், மில்க் சாக்லேட்டுகளைக் கையில் ஒட்டாதவண்ணம், அதில் வேதிப் பொருள்களைக் கலந்து தயாரிக்கின்றன. ஏன் நம் நாட்டில் இனிப்பு மிட்டாய்களே இல்லையா? கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு இணையாக உலகத்தில் வேறு எங்கும் இனிப்பு மிட்டாய்கள் கிடையாது. (பலத்த கைத்தட்டல்). ஆஸ்திரேலியா, அரேபியா நாடுகளில் அவர்கள் நாட்டு பாரம்பர்ய உணவைத்தான் முதலில் நமக்குக் கொடுப்பார்கள். ஆனால் நம் நாட்டில்தான் நம் பாரம்பர்ய உணவுகளைக் கேவலமாகப் பார்க்கும் நிலை இருக்கிறது. இளைஞர்கள் பன்னாட்டு உணவு அரசியலில் சிக்கிச் சீரழியாமல் பாரம்பர்ய உணவு முறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்'' என்றார்.

அடுத்து பேசிய ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், ''எந்த மதத்தையும் சாராமல் அறத்தையும் ஒழுக்கத்தையும் போதிப்பது திருக்குறள் மட்டுமே. தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசுவதை கெளரவமாக நினைக்கிறான் தமிழன். சரி... ஆங்கிலத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டானா என்றால், அதுவும் இல்லை. வாட்யா... யெஸ்யா... நோய்யா..? இப்படித்தான் பேசுகிறான். டிகிரி படித்த இளைஞர்கள்கூட ஐயாம் சவ்வரிங் ஃப்ரம் ஃபீவர் என்றுதான் விடுமுறை கடிதம் எழுதுகிறான். அதைத்தாண்டி அவனுக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லை. முன்பெல்லாம் சாராயக் கடைகளைத் தனியாரும், கல்வி நிறுவனங்களை அரசும் நடத்தி வந்தன. ஆனால், இப்போது சாராயக் கடைகளை அரசும் கல்வி நிறுவனங்களைத் தனியாரும் நடத்துகின்றன. இதனால் கல்வி வியாபாரமாகிவிட்டது. நாங்கள் படிக்கின்ற காலத்தில் பல விளையாட்டுகள் இருந்தன. அவை எல்லாம் இப்போது இல்லை. மணலில் கோபுரம் கட்டி, அதில் ஒரு புறத்தில் கையைவிட்டு மணலை தோண்டித் தோண்டிச் செல்வதும், மற்றொரு புறத்தில் இருந்து நமது ஃப்ரெண்டு தோண்டி வந்து, ஒரே சமயத்தில் நம் கையோடு இணைக்கும் அந்தப் பரவசம் இன்றைய தலைமுறைக்கு கிடைத்திருக்கிறதா? இந்த விளையாட்டு ஆண் பற்றிய பிரமிப்பும், பெண் பற்றிய பிரமிப்பும் நீங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது பள்ளியிலேயே பாய்ஸ் தனி, கேர்ள்ஸ் தனி என்று பிரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கல்லூரி மாணவர்களான உங்களுக்கு இந்த வயதில் முக்கியக் கடமையாக இருப்பது கற்பதும், இளமையை அனுபவிப்பதும்தான். அதை உணர்ந்து செய்யுங்கள். காதலையோ, களியாட்டத்தையோ பெற்றோர்களின் பணத்தில் செய்யாமல், நீங்கள் படித்து முடித்து சம்பாதித்து அதில் செய்யுங்கள். இரண்டு மணி நேரம் மேக்கப் போடும் நடிகைகளிடம் இருப்பது உண்மையான அழகு இல்லை. உண்மையான அழகு என்பது உழைப்பும், அறிவும்தான். பன்னாட்டு நிறுவனங்கள் நம் பண்பாட்டை, உணவை, தேச பக்தியை அபகரிக்க ஆழமான மாய வலையை விரித்துக் காத்திருக்கின்றன. அதில் சிக்கிக்கொள்ளாமல் சிந்தித்து செயல்பட்டு அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற எல்லோரும் பாடுபட வேண்டும்'' என்று தன் பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்