Published:Updated:

அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் பிடிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் பிடிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் பிடிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் பிடிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் பிடிக்கக் கூடாது; உயர் நீதிமன்றம் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நீதிபதிகள் சசிதரன்- சுவாமிநாதன் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணம் வாதிட்டார். அவருடைய வாதத்தில், 'ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்டக் குழு செப்டம்பர் 30-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் பிறகு, 4 மாதங்களில் நடைமுறைபடுத்தப்படும். அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் பகுதிநேர ஊழியர்களாக உள்ளனர். அவர்களை முழு நேர ஊழியர்களாகக் கருத முடியாது. மத்திய அரசு நிர்ணயித்த ஊதியத்தைக் காட்டிலும் அதிகமாக 7,000 முதல் 15,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது' என்று வாதிட்டார்.

இதற்கு அரசு ஊழியர்கள் தரப்பு வழக்கறிஞர் பிரசாத் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர் வாதாடும்போது, 'வெறும் கையோடு நாங்கள் திரும்ப முடியாது. இடைக்கால நிவாரணம் வழங்க வேணடும். அல்லது ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி 7 லட்சம் அரசு ஊழியர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்' என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு எத்தனை நாள்களில் தீர்க்கும் என்று அரசுடன் தலைமைச் செயலாளர் கலந்து ஆலோசித்து தெரிவிக்க வேண்டுமென்றும் அதேபோல் அரசு கேட்கும் கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ள அரசு ஊழியர் சங்கங்கள்  கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறி வழக்கு விசாரனையை பிற்பகல் 2.15-க்கு ஒத்தி வைத்தனர். மதியம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'அரசு ஊழியர்கள்மீது சட்டம்- ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. போராட்டம் நடத்திய நாள்களுக்கான சம்பளத்தைப் பிடித்தம் செய்யக் கூடாது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அறிக்கையை செப்டம்பர் 30-ம் தேதியன்று வழங்க வேண்டும். அதுகுறித்த முடிவை அக்டோபர் 13-ம் தேதிக்குள் ஊழியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தாமதம் ஏற்படும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்த நாள்களை சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்ய வேண்டும்' என்று கூறி வழக்கை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

அடுத்த கட்டுரைக்கு