Published:Updated:

தங்கம் விலை: பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது!

தங்கம் விலை: பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது!
தங்கம் விலை: பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது!
தங்கம் விலை: பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது!

சென்னை:  தங்கத்தின் விலை பவுன் ரு.23,896 ஆக உயர்ந்துள்ள நிலையில், விரைவில் அது  ரூ.24  ஆயிரத்தை நெருங்கிவிடும் எனத் தெரிகிறது.

தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவில் பங்கு சந்தையில்  நிலையற்ற தன்மை, பொருளாதார மந்தம், பண வீக்கம் அதிகரிப்பு போன்ற  காரணங்களால் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது.

தங்கத்தில் முதலீட செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் விலை அதிகரிக்கிறது.  கடந்த மாத இறுதியில் பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகு ஏற்ற  இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,பவுனுக்கு ரூ.23,500-ஐ தாண்டியது.

##~~##
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை பவுனுகு ரூ.120 அதிகரித்து ஒரு பவுன்  ரூ.23,896 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.2987 ஆக இருந்தது. ஏறுமுகமாக  இருப்பதால் பவுன் விலை இன்னும் ஓரிரு நாளில் ரூ.24 ஆயிரத்தை தொடும் நிலை  ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத  பூஜை,தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்குவதாலும்,
தங்கத்தின் தேவை மற்றும் முதலீடு அதிகரித்து வருவதாலும் விலை மேலும் உயரும்  வாய்ப்பு உள்ளது.