Published:Updated:

டீசல், சிலிண்டர் விலை உயர்வு முடிவு ஒத்திவைப்பு!

டீசல், சிலிண்டர் விலை உயர்வு முடிவு ஒத்திவைப்பு!
டீசல், சிலிண்டர் விலை உயர்வு முடிவு ஒத்திவைப்பு!
டீசல், சிலிண்டர் விலை உயர்வு முடிவு ஒத்திவைப்பு!

புதுடெல்லி: டீசல், மண்ணெண்னை, எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்துவது  தொடர்பாக இன்று நடைபெறுவதாக இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விலை உயர்வு இப்போதைக்கு இருக்காது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக டீசல், மண்ணெண்னை, எரிவாயு  சிலிண்டர்களின் விலை உயர்வை அமல்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு,எண்ணெய்  நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இதனையடுத்து பிரதமர் தலைமையில் இன்று மாலை டெல்லியில் அரசியல்  விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.இக்கூட்டத்தில்  விலை உயர்வு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள்  வெளியாகின.

இதனை உறுதிப்படு்த்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை  அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க  முடியாதது என்றும், தொடர்பாக டெல்லியில் நடைபெறும் அரசியல்  விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும்  கூறியிருந்தார்.

##~~##
இந்நிலையில் திடீ திருப்பமாக, இன்று மாலை நடைபெறுவதாக இருந்த அரசியல்  விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
டீசல், மண்ணெண்னை, எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில்  இருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், தற்போதைக்கு விலை உயர்வு இல்லை  என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.