Published:Updated:

'ஆம்னி பஸ்களில் வரும் கொசுக்கள் சென்னையில் டெங்குவைப் பரப்புகின்றன'- அதிகாரிகள் குபீர் விளக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'ஆம்னி பஸ்களில் வரும் கொசுக்கள் சென்னையில் டெங்குவைப் பரப்புகின்றன'- அதிகாரிகள் குபீர் விளக்கம்
'ஆம்னி பஸ்களில் வரும் கொசுக்கள் சென்னையில் டெங்குவைப் பரப்புகின்றன'- அதிகாரிகள் குபீர் விளக்கம்

'ஆம்னி பஸ்களில் வரும் கொசுக்கள் சென்னையில் டெங்குவைப் பரப்புகின்றன'- அதிகாரிகள் குபீர் விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

துரை, சேலம் நகரைச் சேர்ந்த கொசுக்களே ஆம்னி பஸ்களில் வந்து, சென்னையில் டெங்குவைப் பரப்புவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதுமே டெங்கு காய்ச்சலால் இறப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க மதுரை, சேலம் நகரைச் சேர்ந்த கொசுக்களே காரணம் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''சென்னை நகரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெங்குவைக் கட்டுப்படுத்த நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதனால், டெங்கு உருவாகக் காரணமாக இருக்கும் சென்னை நகரத்தைச் சேர்ந்த ஏ.டி.எஸ் கொசுக்களில் வீரியம் இருக்காது. அதேவேளை மதுரை, சேலம் போன்ற நகரங்களில் டெங்குவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த நகரத்தைச் சேர்ந்த கொசுக்கள், டெங்கு காய்ச்சலைப் பரப்புமளவுக்கு வீரியத்துடன் உள்ளன. மதுரை, சேலத்தைச் சேர்ந்த கொசுக்கள், குளிர் சாதன வசதி படைத்த ஆம்னி பஸ்களில் ஏறி சென்னைக்கு வந்து, இங்கு டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்றன'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு