வரலாறு, பண்பாடு, பாரம்பர்யம் எனக் கல்லூரி மாணவர்களைச் செம்மைப்படுத்தி வரும் நிகழ்ச்சி 'தமிழ் மண்ணே வணக்கம்.’ ஜூனியர் விகடன் நடத்தும் இந்த நிகழ்ச்சி, காஞ்சிபுரம் பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

முதலில் பேசிய மருத்துவர் கு.சிவராமன், 'இன்றைக்குத் தொற்றுநோய்களைவிட, தொற்றாநோய்களான நீரிழிவு, புற்றுநோய்தான் நமக்குச் சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் சாப்பாட்டை நாம் சாப்பிட்டோம். இன்றைக்குச் சாப்பாடு தான் நம்மைச் சாப்பிடுகின்றது. இந்திய உணவுப் பொருட்கள் கட்டுப்பாட்டு நிறுவனம், நமது உணவுப் பொருட்களின் 16,500 மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்ததில், 560 உணவுகள் மனிதன் சாப்பிடக்கூடிய அளவுக்கு இல்லை என்கிற தகவலை வெளியிட்டுள்ளது. கட்டுப்பாடற்ற பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் கலந்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், நாம் சாப்பிடக்கூடிய எண்ணெய், காய்கறிகள், சிற்றுண்டி உட்பட எல்லாமே அடங்கி இருக்கின்றது. இவற்றைச் சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோயும், புற்றுநோயும் இன்று பெருகிக்கொண்டே செல்கின்றன. சர்க்கரை நோயை உண்டாக்கக்கூடிய 'அலாக்ஸான்’ என்கிற கெமிக்கல், மைதாவிலும் நூடுல்ஸிலும் உள்ளது. ஓட்ஸை உணவாக உட்கொள்ளும் நம்மில் பலர், அதைவிட சத்துள்ள சிறுதானியங்களை மறந்துவிட்டார்கள். பாரம்பர்ய உணவை நாங்கள் சாப்பிடச் சொல்வது பாரம்பர்யத்தைக் காப்பாற்றுவதற்காக அல்ல, நம் உடலைக் காப்பாற்று வதற்காக!' என்றார்.

அடுத்துப் பேசினார் எஸ்.ராமகிருஷ்ணன். 'வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த சமயம், 16 வயதுடைய சிறுவன் ஒருவன், தனது சித்தியோடு சந்தைக்கு வந்தான். அங்கு இந்தியர்கள், வெள்ளைக் காரர்களின் வீட்டைக் கடக்க வேண்டுமென்றால், நாய்களைப் போன்று கைகளை ஊன்றி கடக்க வேண்டியதைப் பார்த்த சிறுவன், துணிச்சலாக மேடை ஏறி பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் குரல் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக சதிசெய்வதாகச் சொல்லி அவனைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தார்கள். அவன் இறப்பதற்கு முன் தனது சித்திக்கு, 'நான் இறப்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. உனக்குக் குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையின் கழுத்தைத் தடவிப்பார். அதில் தூக்குக்கயிற்றின் அடையாளம் தெரியும். நான் திரும்பப் பிறப்பேன்’ என்று ஒரு கடிதம் எழுதினான். அப்படி ஒரு கடிதத்தை எழுதியவன் பெயர் குதிராம் போஸ். இந்திய சுதந்திரத்துக்காக குதிராம் போஸ் தூக்கில் தொங்கிய வரலாறு எத்தனைப் பேருக்குத் தெரியும்? திரைப்பட நடிகர்களையும், அவர்கள் பிறந்தநாளையும் கொண்டாடும் நமக்கு இந்திய வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை.

200 வருடங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் பெண் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கணிதம் படிக்க பெண்கள் அனுமதிக்கப்படவே இல்லை. சோபியா என்ற பெண், கணிதம் பயில்வதற்காக விண்ணப்பம் அனுப்பினாள். பெண் என்பதற்காக அந்த விண்ணப்பித்தை நிராகரித்தார்கள். இதனால், தனது தலைமுடியை வெட்டிக்கொண்டு ஆண்களைப்போல உடையணிந்து, தன்னை ஓர் ஆண் பெயரில் பதிவு செய்துகொண்டு கணிதம் படித்தாள். பல்கலைக்கழகத் தேர்வில் அவளுக்கு கோல்டு மெடல் கிடைத்தது. அதில் பேசிய அந்தப் பெண், 'பெண்கள் கணிதம் பயிலக் கூடாது என்று சொல்கின்றீர்களே... நான் ஒரு பெண். கணிதம் படித்து கோல்டு மெடல் வாங்கி இருக்கிறேன்’ என்றாள். அதிர்ச்சியில் உறைந்த அங்கிருந்த அறிஞர்கள், ஒரு பெண் ஆண் பெயரில் கல்வி கற்றது செல்லாது என அந்தத் தங்கப் பதக்கத்தைப் பறித்துக்கொண்டார்கள். மேலும், அவர் எந்த ஆய்வையும் செய்யக் கூடாது என்று தடைவிதித்தார்கள். தலைசிறந்த கணித மேதைகள் இருந்த அந்த மேடையில், 'என்னுடைய கணிதத் திறமையை யார் வேண்டுமானாலும் பரிசோதித்துப் பாருங்கள். ஒருவேளை நான் தோற்றுப் போனால், எனது பட்டத்தைப் பறித்துக்கொள்ளுங்கள்’ என்று சவால் விடுத்தாள். அவள் பெண் என்பதால், யாரும் அவள் போட்டியை ஏற்கவில்லை. உலகம் அவளுக்கு அங்கீகாரம் கொடுக்காத அந்த வேதனையிலேயே 30வது வயதில் இறந்துபோனாள். எந்த சோபியாவுக்குக் கல்வி மறுக்கப்பட்டதோ, அந்த சோபியா பெயரில்தான் இன்று பிரான்ஸ் தேசத்தில் கணிதத்துக்கு வழங்கப்படும் மிகச்சிறந்த விருது வழங்கப்படுகின்றது. அவள் பயின்ற கல்லூரியில், சோபியா இங்கேதான் படித்தாள் என்று ஆளுயர சிலை வைத்திருக்கின்றார்கள். படிக்க நினைக்கும் மாணவர்களாகிய நீங்கள் போராடினால், உலகம் உங்களைப் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவமானப்படுத்தினாலும் நிச்சயம் உங்களுக்கான இடம் கிடைக்கும். உலகம் ஒருநாள் கொண்டாடும். வரலாறு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்துவிடாது' என்றார் நம்பிக்கையுடன்.

அடுத்து... சீர்காழி!

படங்கள்: கே.ராஜசேகரன்