Published:Updated:

அரசின் திட்டங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசின் திட்டங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
அரசின் திட்டங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

அரசின் திட்டங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லதா ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மானாமதுரை  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு  திட்டம் 2017-18கீழ் செய்களத்தூர் ஊராட்சியில் நத்தபுரக்கி கண்மாய் வரத்துக்கால் மேம்பாட்டுத்  திட்டம் சுமார் 1.75 கி.மீ அளவில் நடைபெறும் பணியை ஆய்வு செய்து பருவமழை காலம் தொடங்கவுள்ளதால் வரத்துக்கால் மேம்பாட்டுப் பணியை விரைவாக நல்லமுறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இடைகாட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் 2017-18 கீழ் இடைகாட்டூர் கண்மாய் பாசன வாய்க்கால் மேம்பாட்டுப் பணி சுமார் 4.20 கி.மீ அளவில் நடைபெறும் பணியை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து கண்மாய் பாசனவசதிளைப் பயன்படுத்தி நல்ல முறையில் இயற்கை உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அடுத்ததாகக்  திடக்கழிவுப் பணியை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் தொடர்ச்சியாக முத்தனேந்தல் ஊராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணியையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு  திட்டம் 2017-18 கீழ் மரக்கன்று நடுதல் பணியையும் ஆய்வு செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு