Published:Updated:

குறைதீர்க்கும் நாளில், 13 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்!

குறைதீர்க்கும் நாளில், 13 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்!
குறைதீர்க்கும் நாளில், 13 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்!

திருச்சி  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூபாய் 13 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இராணுவத்தில் பணிபுரிந்து பணியிடைக்காலமான மற்றும் உடல் ஊனமுற்ற, முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள், திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில்  இளநிலை உதவியாளர்களாகக் கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம், நேரடி நியமனமாக இளநிலை உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களுக்குப் பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் இராசாமணி  வழங்கினார்.

இதில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து பணியிடைக்காலமான பாலு என்பவரது வாரிசு சூர்யா அர்விந்த் என்பவருக்குப் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும், 5 நபர்களுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றுகளையும், முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 12 இலட்சத்து 90 ஆயிரம் உதவித்தொகையும், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை மூலமாக தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 2016 -ம் ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களில் இரண்டாவது இடத்தைப்பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விமலா மெட்ரிக்குலேசன் பள்ளியைச் சேர்ந்த பிரித்திகா என்பவருக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழும், மேலும், திருச்சி மாவட்டம், உறையூர், இராமலிங்க நகர், நெசவாளர் காலணியைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மாணவி மு.ஸ்ரீதேவி கல்லூரி 3 -ம் ஆண்டு படிக்க மாவட்ட நலப்பணி நிதியிலிருந்து கல்வி நிதியுதவியாக ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் ராசாமணி வழங்கினார்.

இன்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 38 பயனாளிகளுக்கு ரூபாய் 13 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகள் தொடர்பான மொத்தம் 536 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள்மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.