Published:Updated:

’10 நாள்களில் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்’ - நெல்லை மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’10 நாள்களில் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்’ - நெல்லை மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை
’10 நாள்களில் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்’ - நெல்லை மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை

’10 நாள்களில் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்’ - நெல்லை மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டத்தில் தீவிரம் அடைந்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் வகைக் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சுற்றுச்சூழல் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. 

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 200-க்கும் அதிகமான கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கட்டடங்களில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரக்கூடிய டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்பு உணர்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வுசெய்தார். 

அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வரக்கூடிய மெகா துப்புரவுப் பணிகளை ஆய்வுசெய்த அவர், வீடு விடாகச் சென்று குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வுசெய்தார். டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களை தீவிரமாகப் பணியாற்றவும் உத்தரவிட்டார். புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் கொசு புழுக்கள் உற்பதியாகிறதா? என்பதையும் ஆய்வுசெய்தார். பொதுமக்களிடம் டெங்கு விழிப்பு உணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ‘நெல்லை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் அலுவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை  மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் 2,000 பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரம் அடைந்து இருப்பதால், அடுத்த 10 நாள்களில் நெல்லை மாவட்டத்தில் டெங்கு நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விடும்’ என நம்பிக்கை தெரிவித்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு