Published:Updated:

ஆசிரியரின் கழுத்தை அறுத்த வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆசிரியரின் கழுத்தை அறுத்த வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
ஆசிரியரின் கழுத்தை அறுத்த வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

ஆசிரியரின் கழுத்தை அறுத்த வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவண்ணாமலையை அடுத்த போளூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவரை நேற்று காலை அடையாளம் தெரியத நபர் ஒருவர் பள்ளி வாசலிலேயே வைத்து பிளேடால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்றார். 


இச்சம்வத்தால் போளூர் பகுதியே பதற்றமானது. இந்தநிலையில் டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸார் தப்பியோடிய நபரை அடையாளம் கண்டு கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட நபர் போளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.

போலீஸார் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘போளூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் நதியா (பெயர் மாற்றபட்டுள்ளது) என் அக்கா மகள், அந்த சாரிடம் டியூஷன் படித்து வந்தார். டியூஷனுக்கு போகும்போதெல்லாம் ஆபாச வார்த்தைகளில் பேசுவது, பின்பக்கம் கை வைப்பது, தோல்மேல் கைபோடுவது என ஆசிரியர் கார்த்திகேயன் சில்மிஷம் செய்து வந்துள்ளார். இது தினமும் தொடரவே மனமுடைந்து போன நதியா முதலில் அந்த சாரின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். அவரை நான் கண்டிக்கிறேன் வெளியே யாரிடமும் சொல்லிடாத என கூறியுள்ளார். 

ஆனால், மீண்டும் அதேபோல நடக்கவே  என் அக்காவிடம் தெரிவித்தார். அக்கா அதன்பிறகு டியூஷன் அனுப்புவதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு பள்ளி வகுப்பறையில் சில்மிஷம் செய்துள்ளார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என்னிடம் வந்து அழுதுகொண்டே எனது அக்கா மகள் சொன்னது. என்னால் ஆத்திரம் தாங்க முடியவில்லை. நான் நேராக பள்ளிக்குச் சென்று அந்த சார் யார் என்பதை அங்குள்ளவர்களிடம் கேட்டு அடையாளப்படுத்திக்கொண்டு அவரிடம் சென்று  "ஒரு ஆசிரியராக இருக்கும் நீங்களே இப்படிச் செய்யலாமா" என்று சத்தமாக பேசினேன். உடனே அவர் என்னை பள்ளிக்கு வெளியே அழைத்து வந்து இனி இதுபோல் நடக்காது. இந்த விவகாரத்தை பெரிதாக்கவேண்டாம் நீ போ என்றார். ஆனால், என்னால்  கோபத்தை அடக்க முடியவில்லை கையில் வைத்திருந்த பிளேடு கத்தியால் அவன் கழுத்தை அறுத்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பேச்சு கொடுத்தோம். கார்த்திகேயன் சார் வகுப்பறைக்கு வந்ததும் அழகாக இருக்கும் மாணவிகளிடம் அதிகமாக பேசுவார். கிளாஸ் எடுக்கும்போது போர்டில் எழுதிப்போட்டு கிளாஸ் எடுக்கமாட்டார் எல்லோரையும் கூப்பிட்டு அவர் உட்காந்து இருக்கும் டேபிளைச் சுற்றி நிற்கவைத்துகொண்டு பாடம் எடுப்பார். அப்போது பக்கத்தில் இருக்கும் மாணவிகள் மீது கைபோடுவது கிள்ளுவது என சில்மிஷம் செய்வார் என்று வேதனையோடு கூறினர்.

அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர். கார்த்திகேயன் சார் மாற்றுத்திறனாளி என்பதால், தாங்கி தாங்கித் தான் நடப்பார். 40 வயது இருக்கும் எங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார். இதுபோன்று மாணவிகளிடம் சில்மிஷம் செய்வார் என்பது எங்களுக்கு தெரியாது மாணவிகளும் அவர்மீது புகார் கூறவில்லை. சம்பவம் நடந்த அன்றைக்கு கூட விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றதும், எங்களுக்கு ஏன் இப்படி சொல்கிறார் என்று புரியவில்லை. போலீஸ் விசாரணையில்தான் இது தெரியவந்தது என்றனர். கார்த்திகேயனிடம் நெருங்கிப் பழகியவர்களிடம் பேசினோம். கார்த்திகேயன் சார் பொண்ணுங்க விஷயத்துல வீக்; ஆனால், அவரைப் பார்த்தால் அப்படி தெரியாது என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு