Election bannerElection banner
Published:Updated:

கந்துவட்டி, கலெக்டர், எஸ்.பி-க்கு முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!

''கந்துவட்டி தொடர்பான புகார்களில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

கந்துவட்டி, கலெக்டர், எஸ்.பி-க்கு  முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!

கந்துவட்டிக் கொடுமையின் காரணமாகக் கடந்த திங்கள்கிழமை, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் நான்கு பேர் குடும்பத்துடன் தீக்குளித்தனர். அதில், இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கந்துவட்டி ஒழிப்புகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், 'கந்துவட்டி தொடர்பான புகார்களில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டிக்கு விடுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி மூலம் சட்டவிரோதமாக சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால், அந்த சொத்துகள் மீட்டுத் தரப்படும். நீதிமன்றத்தின்மூலம் கடன் தொகையைத் திருப்பிச்செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், கந்துவட்டி தொடர்பான புகார்களை தைரியமாக காவல்நிலையத்தில் அளிக்கலாம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு