Election bannerElection banner
Published:Updated:

நெல்லை கலெக்டரை கைதுசெய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது!

நெல்லை கலெக்டரை கைதுசெய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது!
நெல்லை கலெக்டரை கைதுசெய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது!

நெல்லை கலெக்டரை கைதுசெய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது!

கந்துவட்டி கொடுமையால், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலித் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக, ஆட்சியர் மற்றும் அதிகாரிகளைக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைதுசெய்யப்பட்டார்.

கந்துவட்டி கொடுமையைச் சமாளிக்க முடியாமல், நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் தீக்குளித்தனர். உடல் முழுவதும் வெந்த நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், இசக்கிமுத்து மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார். மற்ற மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சோகச் சம்பவத்தின் கொடூரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கந்து வட்டிக்கு எதிரான கருத்தாக்கம் உருவாக, மூவரின் மரணமும் காரணமாகிவிட்டது. அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கந்து வட்டியைத் தடுக்கக் கோரி குரல் எழுப்பிவருகின்றனர். இந்த நிலையில், மதுரை சட்டக் கல்லூரி மாணவியும் சமூகப் போராளியுமான நந்தினி, இந்தக் கொடுமையைக் கண்டித்து, நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். 

அதனால், ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கலெக்டர் அலுவலக ஊழியர்களைக்கூட சோதனையிட்ட பின்னரே போலீஸார் உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் கையோடு கொண்டுவந்திருந்த பதாகையைப் பிடித்தபடி அமர்ந்தனர். உடனடியாக அவர்களைப் போலீஸார் கைதுசெய்தனர். 

 அதற்கு, நந்தினி எதிர்ப்புத் தெரிவித்தார். ‘இன்று எங்களிடம் இந்த அளவுக்கு கெடுபிடி செய்யும் நீங்கள், அன்று உங்கள் கடமையைச் செய்திருந்தால், அப்பாவிக் குழந்தைகள் உள்ளிட்ட மூவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாமே. நாங்கள் நடத்தும் இந்த அறப்போராட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது ஏன்?’ என வாக்குவாதம் செய்தார். இதனால், போலீஸாருக்கும் நந்தினிக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், அவரை அவசரமாகக் கைதுசெய்து வேனில் ஏற்றினார்கள்.

அப்போது பேசிய நந்தினி, ‘’கந்துவட்டிக் கொடுமை தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல்துறை அதிகாரிகள்மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்ய வேண்டும். தமிழகத்தில் ஆட்சி முறையாக நடக்கவில்லை. தமிழக அரசு செத்துவிட்டது. அரசு, சமாதிக்குச் சென்றுவிட்டதன் காரணமாகவே, அப்பாவி மக்கள் சாவும்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்’’ என்றார் ஆவேசமாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு